Home /News /automobile /

இந்தியாவில் களைகட்டும் வாகனச் சந்தை - பண்டிகை கால விற்பனைக்காக காத்திருக்கும் சொகுசு கார்கள்.

இந்தியாவில் களைகட்டும் வாகனச் சந்தை - பண்டிகை கால விற்பனைக்காக காத்திருக்கும் சொகுசு கார்கள்.

சொகுசு கார்கள் விற்பனை

சொகுசு கார்கள் விற்பனை

Premium Car Market : இந்தியாவில் முக்கிய கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் புதிய சொகுசு கார்களை பண்டிகை காலத்தில் சந்தையில் அறிமுகப்படுத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    2022ம் ஆண்டு இந்தியாவில் சொகுசு கார் விற்பனை முந்தைய ரெக்கார்டுகளை எல்லாம் பிரேக் செய்யும் என மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), டொயோட்டா லெக்சஸ் (Toyota's Lexus), வோக்ஸ்வாகன் குழுமத்தின் ஆடி (Audi) முன்னணி சொகுசு கார் விற்பனையாளர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். சமீப காலமாக ஆடம்பர கார்களின் விற்பனை அதிகரித்து வருவதால், பண்டிகை கால ஸ்பெஷலாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சொகுசு கார்களை வாங்க திட்டமிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகளவில் நிலவி வந்த சிப் நெருக்கடி மற்றும் விநியோக  சங்கிலி சிக்கல்கள் போன்ற சவால்கள் தற்போது குறைந்துள்ளதும், கொரோனாவால் ஏற்பட்டு வந்த பொருளாதாரத் தடைகள் குறைந்து வருவதும், இந்தியாவில் சொகுசு கார் விற்பனையை முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பானதாக மாற்றப்படும் என  கூறப்படுகிறது.

    இந்தியாவில் சொகுசு கார் தயாரிப்பாளர்களுக்கு 2019ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. மெர்சிடிஸ் பென்ஸ், வோக்ஸ்வாகன் போன்ற தயாரிப்பாளர்களின் கார்கள் 40,000 யூனிட்கள் வரை விற்பனையாகின. குறிப்பாக உலகின் மிகப்பெரும் கார் உற்பத்தியாளர் என அழைக்கப்படும் டொயோட்டா நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களையும் சேர்த்து, 2021 ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க 1.05 கோடி யூனிட்களை விற்பனை செய்திருந்தது.

    Also Read : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

    தற்போது கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளதும், தொழில்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளதும் சொகுசு கார் விற்பனையில் மறுமலர்ச்சியாக அமையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவில் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு வாடிக்கையாளர்கள் தேர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் சொகுசு கார்களுக்கான தேவையை அதிகரித்து வருகிறது. சொகுசு கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கள் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியதால், செக்மென்ட் மற்றும் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருவதால் சொகுசு கார்களுக்கான விற்பனையும் ‘வி’ வடிவ வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது.

    சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பின் படி, 2022ம் ஆண்டு டொயோட்டா லெக்ஸ் சொகுசு காரின் விற்பனை 2019 ஆண்டை விட அதிகரிக்கும் என்றும், 2017ம் ஆண்டு இந்திய சந்தையின் ஹைப்ரிட் கார்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட, கடந்த ஜூலை மாதம் முதல் முன்பதிவு அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

    மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள சாக்கன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் புதிய மின்சார கார் உட்படப் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவன செடான் வகை ஆடம்பர எலெக்ட்ரிக் காரான மெர்சிடிஸ் EQS காரை இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சொகுசு எலெக்ட்ரிக் கார் ஆகஸ்ட் 24 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

    ஆடி சமீபத்தில் இந்தியாவில் A8 L ஐ அறிமுகப்படுத்தியது. விரைவில் புதிய க்யூ3 எஸ்யூவியையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இரண்டு கார்களும், ஆடியின் தற்போதைய மாடல்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுடன் சேர்த்து நல்ல விற்பனை எண்ணிக்கையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் குழுமத்தின் ஆடி இந்தியா, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் லெக்சஸ் ஆகியவை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சொகுசு கார்களுக்கான தேவை வலுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Audi, Luxurious cars, Mercedes benz

    அடுத்த செய்தி