ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, வரும் 2033-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும், இன்டெர்னல் கம்ப்யூஷன் எஞ்ஜின்ஸ் (Internal Combustion Engines) மூலம் இயங்கும் கார்கள் தயாரிப்பு ஒரு கட்டத்தில் நிறுத்தப்படும் என்றும் நிறுவனத்தின் உயரதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
இன்டெர்னல் கம்ப்யூஷன் எஞ்ஜின்கள் மூலம் இயங்கும் கார்களை தயாரிப்பதை நிறுத்த திட்டமிட்டுள்ள ஆடி, நாட்டில் EV வணிகத்தில் ஏற்கனவே நுழைந்துள்ளது. அதன் சொகுசு கார் தயாரிப்பு போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டுச் சந்தையில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களை ஆடி வழங்குகிறது.
ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ள தகவலில், ஜெர்மன் நிறுவனமான ஆடி ICE மூலம் இயங்கும் தற்போதைய மாடல்களின் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டு உள்ளது, மேலும் இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது வரும் 2033 -ஆம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்வதற்கான மாற்றத்தை நிறுவனம் தொடங்க திட்டமிட்டிருப்பதாக்கவும் கூறி இருக்கிறார். எனினும் முழுவதுமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் வரை (2032-ஆம் ஆண்டு வரை), பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட அனைத்து மாடல்களையும் நிறுவனம் தயாரிக்கும் என்றும் பல்பீர் சிங் தில்லான் தெளிவுபடுத்தி உள்ளார்.
Also Read:3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமானங்களை இயக்குகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.!
பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பல்பீர் சிங், பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றிற்காக பேட்டரிக்கான அனைத்து உதிரிப்பாகங்களும் தனித்தனியாகக் கொண்டு வரப்பட்டு பயிற்சி பெற்ற நிபுணர்களால் தொழிற்சாலைகளில் அசெம்பிள் செய்யப்பட்டதாக கூறினார். இதனிடையே நிறுவனத்தின் ப்ரீ-யூஸ்டு கார் ஷோரூம் ஆடி அப்ரூவ்டு பிளஸ் திறந்து வைத்த பிறகு, இந்த ஆண்டு திறக்க திட்டமிடப்பட்டுள்ள 22 அவுட்லெட்டில் இது 17-வது என்றார். முந்தைய ஆண்டை விட 2021-ஆம் ஆண்டில் ஆடி இந்தியா 101% விற்பனையைப் பதிவு செய்துள்ளது மற்றும் முதல் 6 மாதங்களில் (ஜனவரி-ஜூன் 2022) 49% உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார். 2026-ஆம் ஆண்டிற்குள் அனைத்து புதிய தலைமுறை கார்களும் எலெக்ட்ரிக் கார்களாக மாறும் என்று தில்லான் கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆடி நிறுவனம் இந்திய கார் சந்தையில் e-tron GT மற்றும் RS GT எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை ரூ.1.79 கோடி (எக்ஸ் ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி காரின் விலை ரூ2,04,99,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். முன்னதாக, அடுத்த 3 ஆண்டுகளில் உலகளவில் அதன் விற்பனையில் 15% எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க இலக்கு வைத்துள்ளதாக ஆடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Audi, Car, Electric bike, Electric car, Sales