Home /News /automobile /

விமானம் ரத்து, மோசமான உணவு இதெல்லாம் இல்லை... விமான பயணிகளுக்கு ஏற்படும் ஒரே பிரச்சனை என்ன தெரியுமா?

விமானம் ரத்து, மோசமான உணவு இதெல்லாம் இல்லை... விமான பயணிகளுக்கு ஏற்படும் ஒரே பிரச்சனை என்ன தெரியுமா?

35 சதவீத விமான பயணிகளுக்கு ஏற்படும் ஒரே பிரச்சனை

35 சதவீத விமான பயணிகளுக்கு ஏற்படும் ஒரே பிரச்சனை

விமான பயணத்தின் போது பயணிகள் அதிகம் பாதிக்கப்படுவது லக்கேஜ் தொடர்பான சேவையில் தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உலகம் முழுவதும் விமான பயணிகள் தங்களது பயணத்தின் போது விமானம் தாமதமாகப் புறப்படுவது, வானிலை காரணமாக ரத்தாவது, இயந்திர கோளாறு, தாமதமான தரையிறக்கும், மோசமான உணவு போன்றவை குறித்து புகார் தெரிவிப்பதை விட, சுமார் 35 சதவீதம் பேர் தங்களது லக்கேஜ் தொடர்பாக நிறையப் பிரச்சனைகளைச் சந்திப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    விமான பயணத்தின் போது பயணிகள் தங்களது லக்கேஜ் தொடர்பான விஷயங்களில் என்னென்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை அறிய சோசியல் கம்யூனிட்டி தளமான LocalCircles கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

    அந்நிறுவனம் விமான பயணிகளிடம் நடத்திய சமீபத்திய ஆய்வில், கடந்த 3 ஆண்டுகளில் நான்கில் ஒருநபர் தனது லக்கேஜ்களை இழப்பது அல்லது தாமதமாகப் பெறுவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக 35 சதவீத விமான பயணிகள் தங்களது பயணத்தின் போது எடுத்துச் சென்ற சூட்கேஸ், ட்ராலி, ட்ராவல் பேக் போன்ற லக்கேஜ்கள் ஒன்று அல்லது பலமுறை சேதமடைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

    விமானப் பயணிகளிடம் “2020 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் மேற்கொண்ட விமான பயணத்தின் போது எத்தனை முறை உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினருடைய லக்கேஜ் சரியான நேரத்திற்குக் கிடைக்காமலிருந்துள்ளது? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு 10,944 பேரில் 14 சதவீதம் பேர் ஒருமுறையும், 11 சதவீதம் பேர் இரண்டு முறையும் தங்களது பொருட்கள் தொலைந்து போயோ அல்லது தாமதமாகவோ கிடைத்திருப்பதாகப் பதில் அளித்துள்ளனர். இதில் 75 சதவீதம் பேர் தங்களது லக்கேஜை சரியான நேரத்தில் விமான நிலையத்திலிருந்து டெலிவரி பெற்றதாகத் தெரிவித்துள்ளனர்.

    கன்வேயர் அல்லது பேக்கேஜ் லாஜிஸ்டிக்ஸ் உபகரணங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், பயணிகளின் உடைமைகளைத் தவறாகக் கையாளுதல், தவறான விமானத்தில் லக்கேஜ்களை அனுப்பிவிடுவது, லக்கேஜ் குறித்து எழும் சந்தேகம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் பயணிகள் சரியான நேரத்திற்கு தங்களது லக்கேஜை பெறமுடியாமல் போகிறது.

    Also Read : 2030ம் ஆண்டு இந்த வகை வாகனங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும்... இந்தியாவுக்குக் காத்திருக்கும் அடுத்த சவால்!

    மூன்று ஆண்டுகளில் எத்தனை முறை விமான நிறுவனம் உங்கள் லக்கேஜ்களை சேதப்படுத்தியுள்ளன என்ற கேள்விக்கு, 10,981 பேரில் 35 சதவீதம் பேர் தங்களது லக்கேஜ் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் தங்களுடைய அல்லது அவர்களது குடும்பத்தினரின் உடைமைகள் இரண்டு முறை சேதமடைந்துள்ளதாகவும், 5 சதவீதம் பேர் தனது லக்கேஜ் இரண்டு முறை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மற்றொரு 5 சதவீதம் பேர் மூன்று முறையும், இன்னும் 5 சதவீதம் பேர் நான்கு முறைக்கு மேலும் இந்த அனுபவத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

    தொலைந்து போன அல்லது சேதமடைந்த லக்கேஜ் தொடர்பாக விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளும் போது அவர்களது பதில் மற்றும் அணுகுமுறை எப்படியுள்ளது என்ற கேள்விக்கு, 11,112 பேரில், 62 சதவீதம் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 38 சதவீதம் பேர் மோசமாக இருந்ததாகவும், 12 சதவீதம் பேர் வருத்தம் அடைந்ததாகவும் பதிலளித்துள்ளனர். இதில் மற்றொரு 12 சதவீதம் பேர் சராசரியான ரெஸ்பான்ஸை பெற்றதாகவும், 25 சதவீதம் பேர் நடவடிக்கை சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    அரசாங்க விமானப் போக்குவரத்துத் தரவுகளின்படி, இந்திய விமான நிறுவனங்களுக்குப் பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான புகார்களில், தங்களது சாமான்கள் தொலைந்துவிட்டது அல்லது சேதமடைந்துவிட்டதாகப் புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Airport, Passengers, Travel

    அடுத்த செய்தி