• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • பண்டிகை கால அறிமுகங்கள்..களமிறங்க காத்திருக்கும் புதிய டூ வீலர்களின் லிஸ்ட் இதோ!

பண்டிகை கால அறிமுகங்கள்..களமிறங்க காத்திருக்கும் புதிய டூ வீலர்களின் லிஸ்ட் இதோ!

Bike launches 2021

Bike launches 2021

இளைஞர்களின் பேராதரவு பெற்ற பல்சர் மாடலின், பஜாஜ் பல்சர் 250 பைக்கின் 2021 வெர்ஷனை பஜாஜ் நிறுவனம் வரும் நவம்பரில் அறிமுகப்படுத்தும்

  • Share this:
நாட்டில் ஆட்டோமொபைல் சந்தை சிறிது சிறிதாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், அடுத்து வரும் மாதங்கள் பண்டிகை காலம் நிறைந்தவையாக இருக்கின்றன. எனவே பண்டிகை காலத்தை முன்னிட்டு பல வாகன தயாரிப்பாளர்கள் தங்களது புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். பண்டிகை காலங்களில் சில புதிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் நாட்டில் விற்பனைக்கு வரும் போது, சில இயர்லி அப்டேட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்புகளும் நிலவி வருகின்றன. அடுத்த சில மாதங்களில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.

பஜாஜ் பல்சர் 250:

இளைஞர்களின் பேராதரவு பெற்ற பல்சர் மாடலின், பஜாஜ் பல்சர் 250 பைக்கின் 2021 வெர்ஷனை பஜாஜ் நிறுவனம் வரும் நவம்பரில் அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பைக் இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் பைக்களிலேயே சிறந்ததாக மற்றும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த பைக்கில் 250 சிசி லிக்விட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய பல்சர் 250 பைக்கானது கேடிஎம் 200 டியூக், சுசுகி ஜிக்ஸர் 250 மற்றும் யமஹா எஃப்இசட் 25 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:  பெட்ரோல் விலை 35 ரூபாயாக குறைக்க நடவடிக்கை – பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

நியூ-ஜென் KTM RC390:

புதிய ரக பல்சர் பைக்குகளைத் தவிர, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் நியூ-ஜென் KTM RC ரேஞ்ச் விற்பனையை துவக்க அடுத்த தலைமுறை KTM RC390-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் பச்சை விளக்கு காட்டும் என்று தெரிகிறது. இந்த பைக் மிகவும் விலை உயர்ந்த மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் குளோபல் வெர்ஷனுக்கு ஒத்ததாக இருக்கலாம். new-gen RC390 இந்த நவம்பரில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் ஜூபிடர் 125:

சமீபத்தில் தனது TVS Raider 125 வாகனத்தை அறிமுகப்படுத்திய நிலையில், புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டருடன் (TVS Jupiter 125),125 சிசி டூவீலர் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்த தயாராகி வருகிறது டிவிஎஸ் நிறுவனம். இந்த புதிய ஸ்கூட்டர் அடுத்த வாரம் (வரும் அக்டோபர் ) அறிமுகமாக உளளதாக தெரிகிறது. இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 உள்ளிட்ட 125 சிசி ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாளராக இந்த ஸ்கூட்டர் இருக்கும்.

பிஎம்டபிள்யு 400 ஜிடி (BMW 400 GT):

BMW Motorrad India பல சமயங்களில் புதிய BMW 400 GT ஸ்கூட்டரின் டீஸர்களை வெளியிட்டுள்ளது. BMW-வின் இந்த புதிய தயாரிப்பு தற்போது இந்தியாவில் உள்ள சில BMW மோட்டோராட் கடைகளில் ப்ரீ ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை ரூ.1 லட்சம் என்ற கட்டணத்தில் புக் செய்யலாம். இதன் விலை தோராயமாக ரூ.5 லட்சத்திற்கும் மேல இருக்கலாம். இது 350 சிசி லிக்விட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயங்கும் இது 7,500 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 5,750 ஆர்பிஎம்மில் 35 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: