லண்டன் எலக்ட்ரிக் வாகன நிறுவனம் தனது டிஎக்ஸ் மாடல் காரினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ‘லண்டன் எலக்ட்ரிக் வாகன நிறுவனம்’ (LEVC) தனது மின்சார டிஎக்ஸ் (TX) வாகனத்தை இந்திய சந்தையில் வெளியிட தயாராகி வருகிறது. எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து இதனை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. டிஎக்ஸ் கார் ஆனது உலகின் அதிநவீன பிரீமியம் மாடலில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.
லண்டனில் மிகப் பெரிய நிறுவனமான ‘லண்டன் எலக்ட்ரிக் வாகன நிறுவனம்’ ( LEVC ) இந்தியாவில் தனது கிளையை பரப்ப இந்த டிஎக்ஸ் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. ‘லண்டன் டாக்ஸி’ என்ற பெயரில் இக்கார் இங்கிலாந்தில் அழைக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த நிறுவனம் மின்சாரத்தால் இயங்கும் காரினை உருவாக்குகிறது.
Must Read | தொழில்நுட்ப உலகில் அடுத்த மைல்கல்… ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் பிரம்மாண்டமான விர்ச்சுவல் ரியாலிட்டி!
இது சுற்றுசூழலுக்கு தீங்கின்றி இயங்கும். இந்தியா மின்சார வாகனங்களுக்கான வளர்ந்து வரும் சந்தையாக மாறியுள்ளது. எல்இவிசி நாட்டிற்குள் நுழைவதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. வாகனத்தின் தொழில்நுட்பம், அழகியல் மற்றும் நடைமுறைத் திறன் ஆகியவை வரும் நாட்களில் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வரும்’ என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பேட்டரி மற்றும் மின்மோட்டாரின் சீரான திறன் வெளியேற்றத்திற்கு இதன் இலகுவான எடை அதிக உதவியாக இருக்கின்றது. மிகவும் பழமையான வாகனம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் அனைத்தும் ‘எல்இடி’ ( LED ) தரத்திலானவை ஆகும். கடந்த காலங்களில் டிஎக்ஸ் டீசல் எஞ்ஜினுடனே உருவாக்கும் இந்த நிறுவனம், தற்போது ஹைபிரிட் வசதி உடன் கார்கள் உருவாக்கி வருகிறது. ஆறு பயணிகள் இருக்கைகள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
Must Read | ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் அப்ளை செய்ய ஸ்டெப்ஸ் இதோ!
எல்இவசி டிஎக்ஸ் முழு மின்சார இயக்கத்தைக் கொண்ட வாகனமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் 1.5 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஓர் வால்வோ நிறுவனத்தின் எஞ்ஜின் ஆகும். இதில் இருந்து கிடைக்கும் ஆற்றல் பேட்டரி சார்ஜ் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. ஆகையால், பெட்ரோல் எஞ்ஜின் இதில் இருந்தாலும் மின்சார மோட்டாரால் மட்டுமே இயங்கும் நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது
முழுமையாக சார்ஜ் செய்தால் 101 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதுபோல, முழுமையாக பெட்ரோலை டேங்கை நிரப்பிவிட்டு பயணித்தால் 510 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த டிஎக்ஸ் காரை எக்ஸ்குளூசிவ் மோட்டார்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. லண்டன் எலக்ட்ரிக் வாகன நிறுவனம் (LEVC) 1908ல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.