ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பாக்கவே பக்காவா இருக்கு.. இந்திய சாலைக்கு வருகிறது லண்டனின் எலெக்ட்ரிக் பஸ்!

பாக்கவே பக்காவா இருக்கு.. இந்திய சாலைக்கு வருகிறது லண்டனின் எலெக்ட்ரிக் பஸ்!

மின்சார பேருந்து

மின்சார பேருந்து

Electric Bus | லண்டன் சாலைகளை அலங்கரித்து வந்த எலெக்ட்ரிக் பேருந்துக்கள் விரைவில் இந்தியாவின் தானே சாலையை அலங்கரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொது போக்குவரத்தை சுற்றுப்புறசூழலை காக்கும் மாசு இல்லாததாக மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் மூலமாக எலெக்ட்ரிக் பேருந்துக்களை வாங்கும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் மாநில அரசுகளும் பன்னாட்டு நிறுவனங்களின் எலெக்ட்ரிக் பேருந்து தொடர்பாக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன.

லண்டன் சாலைகளை அலங்கரித்து வந்த எலெக்ட்ரிக் பேருந்துக்கள் விரைவில் இந்தியாவின் தானே சாலையை அலங்கரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனை தளமாகக் கொண்ட காசிஸ் குரூப் லிமிடெட்டின் (சிஜிஎல்) எலெக்ட்ரிக் பேருந்துகள் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண்-டோம்பிவ்லி நகரங்களின் சாலைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 107 எலெக்ட்ரிக் பேருந்துகளை 12 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான ஒப்பந்தத்தை கல்யாண்-டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (கேடிஎம்சி), காசிஸ் குரூப் லிமிடெட் உடன் மேற்கொண்டுள்ளது.

CGL ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

காசிஸ் குரூப் லிமிடெட், கல்யாண் டோம்பிவ்லி முனிசிபல் போக்குவரத்துக்கு 9 மீட்டர் குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத எலெக்ட்ரிக் பேருந்துக்கள், அதனை இயக்குவதற்கான ஓட்டுநர்கள், சிவில் உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு போன்றவற்றை வெட் லீஸ் மாடல் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு வழங்க உள்ளது.

டிஎம்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “9-மீட்டர் இ-பஸ் சேவை ஒப்பீட்டு அளவில் மற்ற பேருந்துகளை விட குறைவான செலவைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவின் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் பேருந்துகளானது, குறைந்த பராமரிப்பு மற்றும் சர்வீஸ் செலவீனங்களையும், உயர்தர சேவை மற்றும் நீண்ட பேட்டரி பேக்கப்பையும் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read : iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

இந்தியாவில் நிலவி வரும் சார்ஜிங் உட்கட்டமைப்பு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக சக்தி வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட உள்ளது. இதன் மூலமாக பேருந்துகளை இரவு நேரத்தில் சார்ஜ் செய்தால் மட்டுமே போதுமானது. இதனால் மின்சார செலவும் குறைய வாய்ப்புள்ளது.

CGL தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் பங்கா கூறுகையில், “இந்த பேருந்துகள் விரைவில் கல்யாண் டோம்பிவ்லி முனிசிபல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலையான மின் இயக்க தீர்வுகளுடன், பொதுப் போக்குவரத்திற்காக விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலவும் விண்ணை முட்டும் எரிபொருள் விலை, அபாயகரமான பசுமை வாயுக்கள் உமிழ்வு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதோடு, பயணிகளுக்கு வசதியான பிரீமியம் பயண அனுபவத்தை தரும் வகையிலும் எலெக்ட்ரிக் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

Also Read : புதுசா கார் வாங்கப்போறீங்களா?.... மஹிந்திரா எஸ்வியூக்கள் மீது 2 லட்சம் வரை தள்ளுபடி! 

பீட்டர் நெஸ் தலைமையிலான CGL குழுமம், அமெரிக்க, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆசியா-பசிபிக் ஆகிய நாடுகளில் எலெக்ட்ரிக் பேருந்து தொடர்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. மேலும் எலெக்ட்ரிக் பேருந்துகளுடன் தொடர்புடைய உட்கட்டமை மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைப்பது, ஆற்றல் புதுப்பிப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Electric Buses, India