ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

முன்பணம் தேவையில்லை..! ஆன்லைனில் LML ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம்.!

முன்பணம் தேவையில்லை..! ஆன்லைனில் LML ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம்.!

LML ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

LML ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

LML Star Electric Scooter | இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இரு சக்கர வாகன விற்பனையை நிறுத்திய LML motors நிறுவனம் மீண்டும் இங்கு விற்பனையைத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா உள்பட உலகம் முழுவதும் எலெக்டரிக் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குவதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால், இன்னும் 10 ஆண்டுகளில் தற்போதுள்ள இருசக்கர வாகனங்களைப் போன்று மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதற்கேற்ப தான் ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிப்பதோடு சந்தையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இரு சக்கர வாகன விற்பனையை நிறுத்திய LML motors நிறுவனம் மீண்டும் இங்கு விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த முறை எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. எலக்ட்ரிக் பைக், ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் என மூன்று புதிய இரு சக்கர வாகனங்களை வருகின்ற 2023 ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதற்காக சில ஆண்டுகளாக பல கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய வசதிகளுடன் வாகனங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

முன்பணம் இன்றி முன்பதிவு ஆரம்பம்..

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் முதல் அதாவது நவம்பர் 1 ஆம் தேதி முதல் (LML star Electric scooter) எல். எம். எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து LML நிறுவனத்தின் மேலாளர் மற்றும் செயல் அதிகாரி கூறும் போது,“ எங்களின் முதன்மைத் தயாரிப்பான LML ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஆரம்பித்துள்ளது. இந்த வாகனத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வித முன் தொகையும் செலுத்தாமலே முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னோடியில்லாத வரம்பு, கிளாஸ்-லீடிங் வேகம் மற்றும் ரைடர் போன்றவை நினைத்து பார்க்கக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உள்ளது. இதோடு சந்தையில் ஏற்கனவே பல மின்சார வாகனங்கள் விற்பனைக்கு வந்திருந்தாலும் பல எதிர்பார்ப்புகள் வாடிக்கையாளர்களிடம் உள்ளது. எனவே மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் LML நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அமையும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய 5 எஸ்யூவி பற்றிய விவரங்கள் இதோ.! 

LML star Electric scooter-ன் அம்சங்கள்…

LML star Electric scooter ல் டூயன் டோன் தீம், LED DRLS, ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப், இண்டிகேட்டர், முழு டிஜிட்டல் ஸ்க்ரீன், ரியர் ஷாக், ரெட் ஹெட் லைட் வசதி கொண்ட சீட் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - பிரபலமான இந்த டூரிங் பைக்கின் வரலாறு தெரியுமா.?

தற்போதுள்ள சூழலில் கிராமம் மற்றும் நகரம் என அனைத்து இடங்களிலும் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறறது. இப்பிரச்சனைகளை சரி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் மக்களிடம்விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile