ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

LML ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவில் ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்; ஜனவரி 2023ல் விற்பனைக்கு வரவுள்ளதா?

LML ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவில் ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்; ஜனவரி 2023ல் விற்பனைக்கு வரவுள்ளதா?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ல்எம்எல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 360 டிகிரி கேமரா அம்சங்களுடன் வரவுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையால் கார்கள் மற்றும் டூவிலர்களை வாங்குவதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளது. இருந்தப்போதும் எலக்ட்ரிக் வாகனங்களின் மோகம் ஒருபுறம் அதிகரித்தான் செய்கிறது. இதற்கேற்றால் போல் தான் ஒவ்வொரு வாகன உற்பத்தி நிறுவனங்களும், புதிய மாடல்களில் பைக்குகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இச்சூழலில் தான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தியை நிறுத்திய லோஹியா மெஷின்ஸ் லிமிடெட் எனப்படும் எல்எம்எல் (LML) நிறுவனம் மீண்டும் வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது.

  சமீபத்தில் LML நிறுவனத்தை எஸ்ஜி மொபிலிட்டியால் வாங்கப்பட்டதையடுத்து இ-ஸ்கூட்டர், இ-பைக் மற்றும் ஹைப்பர் பைக்கை உருவாக்க எல்எம்எல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஆரம்ப முதலீட்டில் ரூ. 350 கோடி முதலீடு செய்தது. அதன் படி, எலக்ட்ரிக் பைக், ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் என மூன்று புதிய இரு சக்கர வாகனங்களை வருகின்ற 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

  இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் புதிய மைல்கல்லை எட்டி சாதனை.!

  தற்போது லோஹியா மெஷின்ஸ் லிமிடெட் (LML) தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 'Star'க்கு முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவு செய்வதற்கு டோக்கன் தொகை எதுவும் செலுத்த தேவையில்லை என்பதால், வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை இலவசமாக முன்பதிவு செய்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்துறையில் நிலவும் கடும் போட்டிக்கு எதிராக ஸ்டார் இ-ஸ்கூட்டர் வெற்றி பெறுவதற்கு பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

  LML ஸ்கூட்டரில் சரிசெய்யக்கூடிய இருக்கை,  கிளாஸ்-லீடிங் வேகம் மற்றும் ரைடர் போன்றவை நினைத்து பார்க்கக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உள்ளது. மேலும்LML star Electric scooterல் டூயன் டோன் தீம், LED DRLS, ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப், இண்டிகேட்டர், முழு டிஜிட்டல் ஸ்க்ரீன், ரியர் ஷாக், ரெட் ஹெட் லைட் வசதி கொண்ட சீட் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக அமையும்.

  இதோடு மட்டுமின்றி எல்எம்எல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 360 டிகிரி கேமரா அம்சங்களுடன் வரவுள்ளது. மேலும் மற்ற எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு எலக்ட்ரிக் டெக்னாலஜி மற்றும் தயாரிப்புகளுக்காக ஜெர்ம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன கம்பெனி erockit உடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு அம்சங்களுடன் எல்எம்எல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய பரிமாணத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பத்தே மாதங்களில் இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் சாதனை மைல்கல்லை எட்டிய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.!!

  மக்களின் தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு ஓலா, பஜாஜ், டிவிஸ் போன்ற பிற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்குப் போட்டியாக களம் இறங்கியுள்ளது. அதுவும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கு எவ்வித முன்பணமும் செலுத்த தேவையில்லை என்ற தகவலையடுத்து பல வாடிக்கையாளர்கள் எல்எம்எல் ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Automobile, Electric bike