ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ரூ.10 லட்சம் பட்ஜெட்.. ஆபத்து குறைவு.. பாதுகாப்பான கார்களின் லிஸ்ட் இதோ!

ரூ.10 லட்சம் பட்ஜெட்.. ஆபத்து குறைவு.. பாதுகாப்பான கார்களின் லிஸ்ட் இதோ!

பாதுகாப்பான கார்

பாதுகாப்பான கார்

சாலை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல விதமான அம்சகங்களை கொண்டு ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் உள்ள கார்களில் விவரங்கள் இதோ.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்தியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகின்றன. பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் கார்கள் விபத்து நேரங்களில் வாகனத்தில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சில நேரங்களில் விபத்தின் போது சாலையில் செல்லும் பிறருக்கும் கூட ஆபத்தை குறைக்கும் வகையிலும் செயல்படுகிறது.

பாதுகாப்பை பொறுத்தவரை இந்திய கார் தொழில்துறை கடந்த சில ஆண்டுகளில் பல அம்சங்களை செயல்படுத்தி உள்ளது. அரசு கார் நிறுவனங்கள் சில நிலையான பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கார் வாங்குவோர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். அந்த வகையில் நாட்டில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பாதுகாப்பு அம்சம் கொண்ட கார்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

டாடா பஞ்ச்:

2021-ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிகம் விற்பனையாக கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மைக்ரோ எஸ்யூவி-யான டாடா பஞ்ச் அதிக பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்வதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த காரானது அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 5 ஸ்டார்ஸ், சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 4 ஸ்டார்ஸ் ரேட்டிங் பெற்றுள்ளது. அடல்ட் ப்ரொட்டக்ஷன் பிரிவில் இந்த கார் 17 புள்ளிகளுக்கு அதிகபட்சமாக 16.45 புள்ளிகளை பெற்றது.

சைல்ட் ப்ரொட்டக்ஷன் பிரிவில் 49 புள்ளிகளுக்கு அதிகபட்சமாக 40.89 புள்ளிகளை பெற்றுள்ளது. டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், ஈபிடி, பிரேக் ஸ்வே கன்ட்ரோல், லோ-ட்ராக்ஷன் மோட், சீட்பெல்ட் ரிமைன்டர், ஹை-ஸ்பீட் அலெர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ISOFIX சைல்ட் சீட் மவுன்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. டாடா பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6 லட்சம் - ரூ.9.54 லட்சம் வரை இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300:

GNCAP-யிலிருந்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திராவின் முதல் சப்-4-மீட்டர் SUV இதுவாகும். அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 5 ஸ்டார்ஸ் (ஸ்கோர் - 16.42 / 17) , சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 4 ஸ்டார்ஸ் ரேட்டிங் (ஸ்கோர் - 37.44 / 49) பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை 6 ஏர்பேக்ஸ், 4 டிஸ்க் பிரேக்ஸ், ஃப்ரன்ட் & ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் , ABS மற்றும் EBD கொண்ட கார்னரிங் ஃப்ங்ஷன், ஃப்ரன்ட் & ரியர் ஃபாக் லேம்ப்ஸ், ISOFIX ஆங்கரேஜ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து பேஸஞ்சர்களுக்குமான சீட் பெல்ட் ரிமைன்டர்ஸ் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை இது கொண்டுள்ளது. XUV 300 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 8.41 லட்சம் - ரூ.14.07 லட்சம் வரை இருக்கின்றன.

Also Read : இயற்கை எரிவாயுவால் இயங்கும் கார்... அறிமுகப்படுத்தி அசத்திய மாருதி நிறுவனம்

டாடா அல்ட்ரோஸ்:

குளோபல் NCAP-யிலிருந்து 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரே பிரீமியம் ஹேட்ச்பேக் இதுவாகும். இந்த கார் அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 5 ஸ்டார்ஸ் (ஸ்கோர் - 16.13 / 17) , சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 3 ஸ்டார்ஸ் ரேட்டிங் (ஸ்கோர் - 29 / 49) பெற்றுள்ளது. சைல்ட் ப்ரொட்டக்ஷனில் இந்த கார் அவ்வளவு சிறப்பாக இல்லை. 2 ஏர்பேக்ஸ், EBD உடன் ABS, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் கேமரா, முன் இருக்கைகளுக்கான சீட்-பெல்ட் ரிமைன்டர்ஸ் மற்றும் Isofix சைல்ட்-சீட் மவுன்ட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. Tata Altroz காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 6.34 லட்சம் - ரூ.10.25 லட்சம் வரை இருக்கின்றன.

டாடா நெக்ஸான்:

இது டாடாவின் குளோபல் NCAPயிலிருந்து 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இந்த இந்தியா காராகும். இந்த கார் துவக்கத்தில் 4-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இதனையடுத்து நிறுவனம் அம்சங்களை மேம்படுத்தி இரண்டாவது சுற்று சோதனைக்கு அனுப்பியது. அப்போது இது அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 5 ஸ்டார்ஸ் (ஸ்கோர் - 16.06 / 17) பெற்றது. சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 3 ஸ்டார்ஸ் ரேட்டிங் (ஸ்கோர் - 25 / 49) பெற்றுள்ளது. அல்ட்ரோஸை போல இதுவும் சைல்ட் ப்ரொட்டக்ஷனில் சிறப்பாக இல்லை. 2 ஏர்பேக்ஸ், EBD உடன் ABS, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் கேமரா, டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், பிரேக் டிஸ்க் வைப்பிங் மற்றும் Isofix சைல்ட்-சீட் மவுண்ட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. Tata Nexon காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.70 லட்சம் - ரூ.14.18 லட்சம் வரை இருக்கின்றன.

ஹோண்டா ஜாஸ்:

இந்த ஹேட்ச்பேக் அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 4 ஸ்டார்ஸ் (ஸ்கோர் - 13.89 / 17) பெற்றது. சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 4 ஸ்டார்ஸ் ரேட்டிங் (ஸ்கோர் - 31.84 / 49) பெற்றுள்ளது. இந்த கார் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 90bhp பவர் மற்றும் 110Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் அடங்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.11 லட்சம் - ரூ.10.41 லட்சம் வரை இருக்கின்றன.

Also Read : சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

டாடா டியாகோ & டாடா டிகோர் (Tata Tiago & Tata Tigor):

Tiago மற்றும் Tigor ஆகிய 2 கார்களும் ஒரே மாதிரியான 4-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 17-க்கு 12.52 புள்ளிகளை பெற்றுள்ளன. சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 40-க்கு 34.15 புள்ளிகளை பெற்று 2 கார்களும் 3-ஸ்டார் ரேட்டிங்ஸ் பெற்றுள்ளன. 2 கார்களும் டாடாவின் 1.2-லிட்டர், 3-சிலிண்டர் ரெவோட்ரான் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 84bhp பவர், 113 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இரண்டு கார்களும் கவர்ச்சிகரமான வடிவமைப்பை பெற்றுள்ளதோடு அம்சங்கள் நிறைந்த கேபின் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.45 லட்சம் - ரூ.6.10 லட்சம் வரை இருக்கின்றன.

First published:

Tags: Cars, Mahindra, TATA