• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • விரைவில் வெளியாக இருக்கும் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் பட்டியல்..

விரைவில் வெளியாக இருக்கும் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் பட்டியல்..

காட்சி படம்

காட்சி படம்

ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒரு புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி வருகிறது ராயல் என்ஃபீல்ட்..

  • Share this:
தொற்றால் பல மாதங்கள் முடங்கி கிடந்த இந்திய வாகன துறை சமீப காலமாக மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. மேலும் நம் நாட்டில் பண்டிகை காலம் வந்து விட்டதால் அதனையொட்டி பல டூ வீலர் தயாரிப்பாளர்கள், ஏராளமான புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒரு புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட்.

இதனிடையே நியூ ஜென் கிளாசிக் 350 பைக்கின் அறிமுகத்திற்கு பிறகு, பல புதிய மோட்டார் சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த முக்கிய திட்டங்களை கொண்டுள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். அடுத்து வரும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கும் சில ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் பட்டியல் பற்றி தற்போது பார்க்கலாம்.

 



ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் 411: விரைவில் வெளிவர உள்ள லேட்டஸ்ட் மாடலான ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் 411 பைக், RE இமாலயனின் ஸ்க்ராம்ப்ளர் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹிமாலயன் மாடல் பைக்குகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் அதே எஞ்சின் மற்றும் அதே சேஸ் தொடர்ந்து இந்த பைக்கிலும் இடம்பெறும் என்று தெரிகிறது. ஆனால் ஹிமாலயன் போலில்லாமல் இதன் வீல் வித்தியாசமாக இருக்கும். இந்த புதிய பைக் சில மாதங்களுக்கு முன் வெற்றிகரமாக டெஸ்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல ஹிமாலயன் மாடலுடன் வடிவமைப்பை ஒப்பிடும் போது RE ஸ்க்ராம் 411 பைக் ஒரு புதிய ஹெட்லேம்ப்ஸ்களை பெறுகிறது. இது முந்தையதில் இடம் பெற்றுள்ள ஹெட்லேம்ப்ஸை விட வித்தியாசமானது. மேலும் ஹெட்லேம்ப் யூனிட் முன் ஃபோர்க்ஸில் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பைக்கின் மேலும் சில விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷன்:இந்த 2021 ராயல் என்ஃபீல்டின் 120-வது ஆண்டு நிறைவை குறிப்பதால் இதனையொட்டி சென்னையை சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 உள்ளிட்ட சில பைக் மாடல்களில் ஸ்பெஷல் எடிஷன் பெயிண்ட் ஸ்கீம்ஸ்களை (special edition paint schemes) அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் சற்று அதிக விலையை பெற கூடும்.

ராயல் என்பீல்ட் 650 க்ரூஸர் (ஷாட்கன்): இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டின் புதிய தயாரிப்பான ராயல் என்பீல்ட் 650 க்ரூஸர், நிறுவனத்தின் விற்பனையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் எஞ்சின் இன்டர்செப்டரில் காணப்படும் 650 சிசி பேர்லல்-ட்வின் எஞ்சினாக இருக்கும். மேலும் இதன் 650 சிசி எஞ்சின் 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: