Home /News /automobile /

மகிந்திரா டாட்டா ஓலா.. அடுத்தடுத்து அறிமுகமாகும் எலெக்டிரிக் கார்கள்..

மகிந்திரா டாட்டா ஓலா.. அடுத்தடுத்து அறிமுகமாகும் எலெக்டிரிக் கார்கள்..

ஓலா மின்சார கார்.

ஓலா மின்சார கார்.

பெட்ரோல் - டீசல் கார்களிலிருந்து மின்சார கார்களுக்கான மாற்றம் என்பது நாளுக்கு நாள் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த மின்சார கார்களின் சந்தையாக மாற்றும் வகையில், டாடா, மஹிந்திரா, ஓலா ஆகிய நிறுவனங்கள் சக்தி வாய்ந்த பேட்டரிக்களைக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மாறுவது மிகப்பெரிய விஷயமாக கருதபட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தொடங்கியிருந்தாலும், இந்தியா EV ரேஸில் தாமதமாகவே பங்கேற்றது. இதனால் உலகச் சந்தையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் தாக்குபிடிக்குமா?, தரமானதாக இருக்குமா? போன்ற பல கேள்விகள் எழுந்தன.

    தற்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் டாடா, மஹிந்திரா மற்றும் ஓலா போன்ற இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் தங்களது சொந்த BEV (பேட்டரி மின்சார வாகனம்) கார்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.

    இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த மின்சார கார்களின் மையமாக மாற்ற உள்ள புதிய எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகம் இதோ.

    1. டாடா கர்வ்:

    எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வரும், டாடா மோட்டார்ஸ் கான்செப்ட் வடிவத்தில் எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளது. வழக்கமாக கார் தயாரிப்பாளர்கள் புதிய காரை பெட்ரோல் மற்றும் டீசல் மாடலாக அறிமுகப்படுத்திவிட்டு, அதனை சிறிது காலம் கழித்து எலெக்ட்ரிக் காராக வடிவமைப்பார்கள்.

    ஆனால் முதன் முறையாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் மாடலை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த உள்ளது, அதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாட்டாவின் எலெக்டிரிக் கார்.


    கர்வ் கார் ஆனது, எஸ்வியூவின் உறுதியும், கூபே ஸ்டைலையும் கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சாய்வான மேற்கூரை மற்றும் கூர்மையான முன்பக்கத்தை கொண்டுள்ளது. டாஷ்போர்டில் இரண்டு ஃப்ரீ-ஸ்டாண்டிங் டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கும்.

    மிகப்பெரிய பேட்டரி பேக்அப் வசதியுடன் வர உள்ள இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தாலே 500 கிலோ மீட்டர்வரை இயக்கலாம்.

    2. மஹிந்திரா XUV.e8 மற்றும் XUV.e9:

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புதிதாக 5 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் XUV.e பிராண்டின் கீழ் XUV.e8 மற்றும் XUV.e9 அடங்கும்.

    Mahindra E Cars
    மகிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள்.


    இந்த இரண்டு மாடல்களும் மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான XUV700 மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், XUV.e9 எலெக்ட்ரிக் மாடல் மட்டும் கூபே ஸ்டைலை தழுவி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ICE பவர்டிரெய்ன்கள் இடம் பெற்றுள்ளன.

    3. மஹிந்திரா BE.05, BE.07, BE.09:

    மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 எலெக்ட்ரிக் கார்களில் அடுத்த 3 வகைகள் BE மாடலை சேர்ந்தவை. புதிய வடிவமைப்புடன் அறிமுகமாக உள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி வாகனமான இதில், BE.05 மட்டும் காம்பேக்ட் எஸ்யூவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    BE.07 மற்றும் BE.09 ஆகியவை கூபே ஸ்டைலில் பெரிய சைஸ் எஸ்யூவிக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாடல், பேட்டரி என அனைத்திலும் புதிய விஷயங்களை பின்பற்ற திட்டமிட்டுள்ளதால் BE.05, BE.07, BE.09 எஸ்யூவிக்கள் 2024க்குப் பிறகுதான் ஷோரூம்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4. ஓலா எலக்ட்ரிக் கார்:

    இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி வகித்து வரும் ஓலா நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. சுதந்திர தினத்தன்று, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் CEO - பவிஷ் அகர்வால், நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    Ola E Car
    ஓலா எலெக்ட்ரிக் கார்.


    ஓலா எலக்ட்ரிக் கார் 2024 ஆம் ஆண்டுக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலாவின் எலக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    4 வினாடிகளிலேயே 0 முதல் 100 kmph வேகத்தை தொடும் அளவுக்கு த்ரில்லான செயல்திறனைக் கொண்டிருக்கும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Automobile, Electric car

    அடுத்த செய்தி