மாருதி சுசுகி Wagon R எக்ஸ்டிரா எடிசன் கார் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன?

Maruti wagon r

மாருதி சுசுகிகியின் பிரபலமான பிராண்டான வேகன் ஆரில், வேகன் ஆர் எக்ஸ்டிரா எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய எடிசன் VXi வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் (Wagon R) எக்ஸ்டிரா எடிசனை கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

மாருதி சுசுகிகியின் பிரபலமான பிராண்டான வேகன் ஆரில், வேகன் ஆர் எக்ஸ்டிரா எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய எடிசன் VXi வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Lxi வேரியண்ட் கார்கள் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் 5.13 லட்சம் நிர்ணயம் செய்யப்படுள்ளது. உதிரி பாகங்களுக்காக 23 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதால் மொத்தம் 5.36 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வேகன் ஆர் எக்ஸ்டிரா எடிசன் மாடலானது கேபின் மற்றும் வெளிப்புற டிசைனில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Also read: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்: சுதந்திரத்துக்கு பின் தங்கம் வெல்லும் முதல் இந்தியர்!

V வேரியண்டைக் காட்டிலும் புதிய எக்ஸ்டிரா எடிசனில் ஒட்டுமொத்தமாக 13 அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, முன் மற்றும் பின் பக்கத்தில் பம்பரை பாதுகாக்கும் பாகம், பக்கவாட்டு ஸ்கர்ட் வீல் ஆர்ச்சுகளுக்கான கிளாடிங், மோல்டிங் ஃபாக் லேம்ப், கார்னிஷ் க்ரில்லின் மேற்பகுதியில் குரோம் கார்னிஷ், டயர் இன்ஃபிளேட்டர், ட்ரங்க் ஆர்கனைசர், கார் சார்ஜர் எக்ஸ்டெண்டர் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த மாற்றங்களாக இருக்கின்றன. இந்த அப்கிரேடுகளுக்காக வேகன் ஆர் எக்ஸ்டிரா எடிசன் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாடல் கார்கள் இருவிதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் எம்.டி எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் வேகன் ஆர் எக்ஸடிரா, 5,35,990 ரூபாய்க்கும், 1.2 லிட்டர் எம். டி எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் மாடலுக்கு 5,71,490 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1.0 லிட்டர் எஞ்ஜினில் கிடைக்கும் வேகன்ஆர் கார் அதிகபட்சமாக 68 bs மற்றும் 90 Nm டார்க்கை வெளியேற்றும். இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைக்கும்.

Also read:  Taliban vs Afghan Forces | ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால், 1.2 லிட்டரில் கிடைக்கும் பெட்ரோல் என்ஜின் வேகன்ஆர் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த எஞ்ஜின் 83 bs மற்றும் 113 Nm டார்க் வரையிலான திறனை வெளியேற்றும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கார் இந்தியாவில் டாடா டியாகோ, ஹூண்டாய் சேன்ட்ரோ ஆகிய கார் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மாடல்களில் விரைவில் எலக்டிரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவும் மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாருதி சுசூகியின் வேகன் ஆர் கார்களுக்கு ஏற்கனவே சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதால், புதிதாக வெளியிடப்பட்டுள்ள வேகன் ஆர் எக்ஸடிரா எடிசனுக்கான விற்பனை அமோகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
Published by:Arun
First published: