ஸ்பெஷல் ஆஃப் ரோடு கியருடன் Land Rover Defender Trophy Edition கார் அறிமுகம்!

Land Rover Defender Trophy Edition

நார்த் கரோலினா, ஆஷ்வில்லியில் இருக்கும் பில்ட்மோர் எஸ்டேட்டில் நடக்கும் ஆஃப்-ரோடு டிராஃபி போட்டி

  • Share this:
SUV பிரிவில், லேண்ட் ரோவர் மிகப்பெரிய மற்றும் பிரதானமான வாகனம் ஆகும். இந்த நிறுவனம், தற்போது தனது லிமிடெட் எடிஷனான Defender வரிசைக்கு, 220 சிறப்பு பாகங்களுடன், புதிய வேரியண்டை கொண்டு வருகிறது. இந்த லிமிடெட் பதிப்பு வாகனங்கள் தற்போது அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அது மட்டுமின்றி, இது ஆகஸ்டு மாதம் முதல் விற்பனை செய்யப்படலாம் மற்றும் இதன் விலை $90 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது.

இந்த Trophy Edition, 2022 Defender 110 P400 X-டைனமிக் SE இல் இருந்து தொடங்குகிறது. வெளிப்புறத்தில், மஞ்சள் மற்றும் கருப்பு நிற கோடுகளுடன், டிஃபெண்டர் வொர்க்ஸ் V8 டிராஃபி அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடலுடன் தொடங்குகிறது. இந்த வாகனத்தில் கதவுகளில், லேண்ட் ரோவரின் பழைய சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.

Also Read:  மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

இந்த பதிப்பில், முன்புற Skid plate, Roof Rack, Mud Flaps, மற்றும் உள்கட்டமைக்கப்பட்ட ஏர் கம்ப்ரசர் உடன், ஆஃப்ரோடு பயன்பாட்டுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. இது வின்ச்சுக்காக ப்ரீ-வயர்டு செய்யப்பட்டிருந்தாலும், வின்ச் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், ரியர் கார்கோ கம்பார்ட்மென்ட்டில், ரப்பர் மேட்டிங் உள்ளது.

இதன் நீட்டிக்கப்பட்ட பிளாக் எக்ஸ்டீரியர் பேக், இதன் உடல் வேலைபாட்டில், அதிகப்படியான பிளாக் டிரிம் வழங்குகிறது. இவையெல்லாம், இந்த SUV க்களில் எப்போதுமே இருப்பது. இவை மட்டுமின்றி, ஏர் சஸ்பென்ஷன், கோல்டு என்விரான்மென்ட் பேக், ஆஃப்-ரோடு பேக், மேம்பட்ட ஆஃப்-ரோடில் பயன்படுத்தக்கூடிய திறன்கள் தொகுப்பு, ரியர் வியூ கண்ணாடி கேமரா அமைப்பு, டோ ஹிட்ச் ஆகிய அனைத்தும் விருப்பத்துக்குரியது.

Also Read:  டேக்ஸி ஓட்டுநர் மீது இளம்பெண் தாக்குதல்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

நார்த் கரோலினா, ஆஷ்வில்லியில் இருக்கும் பில்ட்மோர் எஸ்டேட்டில் நடக்கும் ஆஃப்-ரோடு டிராஃபி போட்டியில் கலந்து கொள்ளவும், இந்த காரை வாங்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். வெற்றிபெறும் அணிக்கு, 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஈஸ்ட்னார் கேஸில் என்ற இதே போன்ற போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

Land Rover Defender Trophy Edition


லேண்ட் ரோவரின் டிஃபெண்டர் வரம்பு, அதிவேகமாக் முன்னேறி வருகிறது. உறுதியான மாடல் மற்றும் கூடுதல் இன்டீரியர் ரூம் வரம்பை பெற விரும்புபவர்களுக்கு, மூன்று-வரிசை 130 வேரியன்ட்கள் அடுத்த ஆண்டில் கிடைக்கும் என்று நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது மட்டுமின்றி, இது இரண்டு வேரியண்டுகளாக வருகிறது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவற்றில், ஒரு SVR வேரியன்ட் BMW டிவின்-டர்போ V8 உற்பத்தி செய்யும் 600 ஹார்ஸ்பவர் உடன் வருகிறது. பௌலரும், இதே போன்ற மேம்பட்ட உறுதியான வேரியன்ட் மாடல் உற்பத்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
Published by:Arun
First published: