Home /News /automobile /

Lexus Certification | இந்தியாவில் ப்ரீ-ஓன்ட் கார் விற்பனை செய்ய சான்று.!

Lexus Certification | இந்தியாவில் ப்ரீ-ஓன்ட் கார் விற்பனை செய்ய சான்று.!

லெக்சஸ் கார்

லெக்சஸ் கார்

Lexus Certified Programme | லெக்சஸ் சான்றளிப்புத் திட்டம், தனித்துவமான, மற்றும் தொழில்துறையில் முதல் முறையாக வழங்கப்படும் பல அம்சங்களை வழங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
செகண்ட் ஹேண்ட் பொருட்கள் என்று கூறுவது மாறி, தற்போது ப்ரீ-ஓன்ட் என்று கூறப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ப்ரீ-ஓன்ட் கார்களுக்கு எப்போதுமே நல்ல டிமாண்ட் இருக்கிறது. விலை மதிப்புள்ள கார்களை புதிதாக வாங்க முடியாதவர்கள், ப்ரீ-ஓன்ட் கார்களை குறைந்த விலையில் வாங்குவார்கள். புதிய வாகனங்கள் என்று வரும் போது, ஒவ்வொரு வாகனமும், அதன் அமைப்பு முதல் விற்பனை செய்யப்படுவது வரை, விதிகளுக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும்.

ஆனால், ப்ரீ-ஓன்ட் கார்கள் என்று வரும்போது தரமான கார்கள் கிடைத்தாலும், அதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் என்று எதுவுமே இல்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் லெக்சஸ் ஆட்டோ நிறுவனம் தனது மாடல்கள் ப்ரீ-ஓன்ட் கார்களாக விற்பனை செய்வதற்கு சான்றளிக்கும் ஒரு புரோகிராமை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘லெக்சஸ் சான்றளிக்கப்பட்ட புரோகிராம்’ என்று இதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

லெக்சஸ் கார்கள் மறு விற்பனை செய்யப்படும் போது இந்திய சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று லெக்சஸ் கார் ஓனர்களுக்கு டிசைன் செய்யப்பட்ட ஒரு புரோகிராமாகும். ப்ரீ-ஓன்ட் லெக்சஸ் கார்களுக்கு, 203 புள்ளி பரிசோதனை மற்றும் லெக்சஸ் சான்றிதழை நிறுவனம் வழங்குகிறது. லெக்சஸ் சான்றளிக்கப்பட்ட திட்டம், லெக்சஸ் ஓனர்கள் மட்டுமல்லாமல், ப்ரீ-ஓன்ட் லெக்சஸ் கார்களை வாங்குபவர்களுக்கும் நன்மைகள் அளிக்கும்.



லெக்சஸ் சான்றளிப்புத் திட்டம், தனித்துவமான, மற்றும் தொழில்துறையில் முதல் முறையாக வழங்கப்படும் பல அம்சங்களை வழங்குகிறது. ப்ரீ-ஓன்ட் கார்களுக்கு 24 மாதங்கள் வரை அல்லது 30,000 கிலோமீட்டர் வரையிலான உத்தரவாதம் அளிக்கிறது. கூடுதலாக, லெக்சஸ் சான்றளிக்கப்பட்ட ப்ரீ-ஓன்ட் கார்களை வாங்குபவர்களுக்கு 3 இலவச சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. இந்தத்திட்டத்தின் கீழ் வரும், ஒவ்வொரு லெக்சஸ் ப்ரீ-ஓன்ட் காரும், நிறுவனம் உருவாக்கியுள்ள ஆய்வு, தர நிலை, மற்றும் சேவை வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் முழுமையாக பரிசோதனை செய்யபப்ட்டு, தர நிலைகளை பூர்த்தி செய்கிறதா என்று தீர்மானிக்கப்படும்.

Also Read : இந்த எலெக்ட்ரிக் காரை விட இந்த பேட்டரியின் விலை அதிகமாம்.!

லெக்சஸ் இந்தியாவின் பிரெசிடென்ட், திரு நவீன் சோனி இந்த புரோகிராமைப் பற்றி கூறுகையில், ‘லெக்சஸ் கார்கள் உலகம் முழுவதும் சொகுசு கார்களாகவும், அதிக நம்பகத்தன்மை வாய்ந்த காராகவும் அறியப்பட்டுள்ளது. இந்த லெக்சஸ் சான்றளிக்கப்பட்ட புரோகிராமுடன், நாங்கள் இந்தியாவில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதத்தில் புதிய உயரத்தை உறுதி செய்கிறோம். இந்த புரோகிராமின் கீழே, 24 மாதங்கள் உத்தரவாதத்துடன், ஆவணங்கள், சேவை மற்றும் தரத்தில் எந்த குறையும் இருக்காது உறுதி செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

Also Read : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.? 

மேலும், இந்தியாவில், லெக்சஸ் கார்களின் சந்தையை கடந்த ஜனவரியில் தொடங்கிய உடனேயே, லெக்சஸ் கார்களுக்கான தனித்துவமான அனுபவத்தை உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தோம் என்று தெரிவித்தார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி