அபராதங்களை கட்டாமல் டிமிக்கி கொடுத்து வந்த பெண் பிரபலம் - காஸ்ட்லியான சொகுசு காரை பறிமுதல் செய்த போலீஸ்!

நஸ்தியா இவ்லீவா

ஒரு பிரபல ரஷ்ய பயண நிகழ்ச்சியான ஓரியோல் ஐ ரேஷ்காவில் இணை தொகுப்பாளராக தோன்றிய பின், பெரும் புகழ் பெற்றார் நஸ்தியா இவ்லீவா.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெண் பிரபலம் ஒருவர் அவரது பெயரில் வழங்கப்பட்ட சுமார் 199 போக்குவரத்து அபராதங்களை செலுத்த தவறியதால், அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த லம்போர்கினி காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

ரஷ்யாவில் பிரபலமாக இருப்பவர் தொலைக்காட்சி தொகுப்பாளரான நஸ்தியா இவ்லீவா(Nastya Ivleeva). இவருக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர், வர்ணனையாளர், நடிகை என பல முகங்கள் உண்டு. ஒரு பிரபல ரஷ்ய பயண நிகழ்ச்சியான ஓரியோல் ஐ ரேஷ்காவில் இணை தொகுப்பாளராக தோன்றிய பின், பெரும் புகழ் பெற்றார் நஸ்தியா இவ்லீவா.

தொடர்ந்து அடுத்தடுத்த டிவி ஷோக்கள் மூலம் மிக பிரபலமாக இருக்கும் நஸ்தியா இவ்லீவாவை இன்ஸ்டாகிராமில் 18.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் நஸ்தியா இவ்லீவா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனக்கு வழங்கப்பட்ட ஏராளமான போக்குவரத்து அபராதங்களை செலுத்தத் தவறியதால், தனது ஆடம்பர சொகுசு ஸ்போர்ட்ஸ் ரக லம்போர்கினி காரை காவல்துறையினர் கைப்பற்றி எடுத்து சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Also read... புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி கொண்ட சிறந்த மலிவு விலை இருசக்கர வாகனங்களின் பட்டியல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்த இவ்லீவா, ஒரே ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக விதிக்கப்பட்ட 199 செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை கட்டாமல் மீதம் வைத்துள்ளதாக அந்த நாட்டின் உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓவர் ஸ்பீட், முறையற்ற பார்க்கிங், இரட்டை தொடர்ச்சியான கோட்டை முறையின்றி கடந்தது மற்றும் போக்குவரத்து விதிப்படி சாலை திருப்பங்கள் அமைக்கப்படாத இடங்களில் சட்டவிரோதமாக வாகனத்தை வளைத்து திருப்பி பயணம் செய்தது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக நஸ்தியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

போக்குவரத்துக்கு விதிகளை மீறியதற்காக நஸ்தியா இவ்லீவா கட்டாமல் விட்ட அபராதங்களின் மொத்த தொகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் போலீஸார் பறிமுதல் செய்துள்ள நஸ்தியாவின் லம்போர்கினி அவென்டடோர் (Lamborghini Aventador) மாடல் கார் 258,800 டாலர் ($258,800) விலை கொண்டது என்று அந்த உள்ளூர் செய்தித்தாள் தகவல் தெரிவித்துள்ளது.
இவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்துள்ள லம்போர்கினி அவென்டெடார் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு உள்ளது. மேலும் இந்த ரக காரில் 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 700 பிஎஸ் வரை பவரை உருவாக்க கூடியது. தனது ஆடம்பர காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள நஸ்தியா, இன்ஸ்டா பதிவில் தனது வாழ்வில் முதல் முறையாக தனது ஆடம்பர கார் போலீஸாரால் டோ (towed) செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அபராதம் செலுத்துவதற்கும், தனது ஆடம்பர சொகுசு காரை போலீஸிடமிருந்து திரும்ப பெறுவதற்கும் நஸ்தியா காத்திருக்கிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: