• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ரூ.4.99 கோடி விலையில் லம்போர்கினி லேட்டஸ்ட் மாடல் அறிமுகம்!

ரூ.4.99 கோடி விலையில் லம்போர்கினி லேட்டஸ்ட் மாடல் அறிமுகம்!

லம்போர்கினி

லம்போர்கினி

லம்போர்கினி இந்தியாவின் தலைவர் ஷரத் அகர்வால் பேசும்போது, "லம்போர்கினிக்கு இந்திய சந்தை தொடர்ந்து மிக முக்கியமானது.எங்கள் லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ அறிமுகம், இந்தியாவில் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில் உள்ள ஒரு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

  • Share this:
உலகின் மிகப்பெரிய மற்றும் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியை தலைமையிடமாக கொண்ட பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, புதிய ஹுராக்கன் எஸ்.டி.ஓ மாடலை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. தொடக்க விலையாக 4.99 (எக்ஸ் ஷோரூம் விலை) கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மற்ற ஹுராக்கன் மாடலையும் விட சிறந்த செயல்திறனை வழங்குவதன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹுராக்கான் சூப்பர் ட்ரொஃபியோ ஈ.வி.ஓ மற்றும் ஹுராக்கன் ஜி.டி 3 ஈ.வி.ஓ ரேஸ் கார்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கார் 24 மணிநேர டேடோனா சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து 3 ஆண்டுகளாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. லம்போர்கினியின் ஆர் அன்ட் டி (R&D) ஸ்குவாட்ரா கோர்ஸ் மற்றும் சென்ட்ரோ ஸ்டைல் ​​துறைகளால் உருவாக்கப்பட்டது. இதனால்,ஹுராக்கன் எஸ்.டி.ஓ எப்போதும் சிறந்த செயல்திறன் சார்ந்த ஹுராக்கன் மாடலாக கருதப்படுகிறது.

மேலும், இது குறித்து லம்போர்கினி இந்தியாவின் தலைவர் ஷரத் அகர்வால் பேசும்போது, "லம்போர்கினிக்கு இந்திய சந்தை தொடர்ந்து மிக முக்கியமானது.எங்கள் லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ அறிமுகம், இந்தியாவில் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில் உள்ள ஒரு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில்,அவர்கள் சாலைகளில் தினமும் வாகனம் ஓட்டும்போது ரேஸ் காரின் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தின் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தைத் தேடுகிறார்கள்”,என்று கூறியுள்ளார்.

லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ-வை பொறுத்த வரை 5.2 லிட்டர் வி 10 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.இது 630 ஆர்.பி.எம் (RPM) வேகத்தில் 630 பிஹெச்பி மற்றும் 565 என்எம் (NM) ஆகியவற்றை 6,500 ஆர்.பி.எம் வேகத்தில் உருவாக்க ஏழு-வேக எல்.டி.எஃப் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து செயல்படுகிறது. இருப்பினும்,இதன் இலகுரக கட்டுமானம், மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ் மற்றும் சிறந்த பிரேக்கிங் செயல்திறன் ஆகியவற்றின் விளைவாக, ஹுராக்கன் எஸ்.டி.ஓ மூன்று வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ / மணி (km/hr) வரை செல்ல முடியும்.

அதாவது, புதிய லம்போர்கினி கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.0 நொடிகளிலும் 200 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளிலும் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. இந்த காரில் உள்ள பாகங்கள் 75 சதவீதம் கார்பன் ஃபைபரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.

Also read... 1971 போர் வெற்றியை கொண்டாடும் ஜாவா... காக்கி மற்றும் மிட்நைட் கிரே கலரில் பைக் அறிமுகம்!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கியது... வெறும் ₹499 தான்...

காலநிலைகளுக்கு ஏற்ப டிரைவிங் மோட்களை மாற்றிக்கொள்ளும் வகையில் எஸ்.டி.ஓ, டிராஃபியோ மற்றும் பியோஜியா என்ற மூன்று டிரைவிங் மோடுகளை (driving modes) கொடுக்கப்பட்டுள்ளன. அப்டேட்டிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன், இந்தக் கார்களுக்கென்றே பிரத்யேகமாக பிரிட்ஸ்டோன் பொட்டென்சா டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்தக் காரில் இருப்பதால், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என லம்போர்கினி நம்பிக்கை தெரிவித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: