Home /News /automobile /

இரண்டாவது யூனிட் Aventador Ultimae Coupe காரை இந்தியாவிற்கு டெலிவரி செய்த லம்போர்கினி நிறுவனம்.!

இரண்டாவது யூனிட் Aventador Ultimae Coupe காரை இந்தியாவிற்கு டெலிவரி செய்த லம்போர்கினி நிறுவனம்.!

லம்போர்கினி

லம்போர்கினி

Lamborghini Aventador Ultimae Coupe | Aventador Ultimae Coupe-ன் இரண்டாவது யூனிட்டை Rosso Efesto நிறத்தில் லம்போர்கினி இந்தியா டெலிவரி செய்து உள்ளது. இதனை தொடர்ந்து இந்த கார் இந்தியாவில் இந்த நிறத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ள முதல் மாடலாக மாறி இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
லம்போர்கினி நிறுவனம் சமீபத்தில் மற்றொரு Aventador Ultimae Coupe காரை இந்தியாவில் டெலிவரி செய்து உள்ளது. ஆகஸ்ட் 8, 2022 அன்று Aventador Ultimae Coupe-ன் இரண்டாவது யூனிட்டை Rosso Efesto நிறத்தில் லம்போர்கினி இந்தியா டெலிவரி செய்து உள்ளது. இதனை தொடர்ந்து இந்த கார் இந்தியாவில் இந்த நிறத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ள முதல் மாடலாக மாறி இருக்கிறது. இந்த மாடலானது Bronzo Oreadi-யை எக்ஸ்டீரியர் லைவரிக்கான தேர்வாக கொண்டுள்ளது மற்றும் இத்தாலியில் உள்ள கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது.

இந்தியாவில் டெலிவரி செய்யப்பட்டு உள்ள Aventador Ultimae Coupe-ன் இந்த இரண்டாவது யூனிட் ஃப்ரன்ட் பம்பர் டீடெயில்ஸ்களில் 360° லைவரி, ஃப்ரன்ட் ஸ்ப்ளிட்டர் காண்டூர், மிரர் ஹவுசிங், ராக்கர் கவர், ரியர் பம்பர் மற்றும் பாடி கலர் பின்ஸ்ட்ரைப்புடன் வருகிறது. மேலும் இது கார்பன் மேட்சிங் பாடி ஃபினிஷிங்கில் பின்புற டிஃப்பியூசரை கொண்டுள்ளது. இந்த காரில் குறிப்பாக சி-பில்லர் இன்டேக்ஸ், எஞ்சின் டீட்டெயில்ஸ், ஃபிக்ஸ்டு ஏர் இன்டேக் மற்றும் கார்பன் ஃபைபரில் ஃப்ரன்ட் பானட்ஏர் அவுட்லெட்ஸ் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளன.

Lamborghini Aventador LP 780-4 Ultimae Coupe காரானது 769 bhp மற்றும் 720 nm பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 6.5 L V12 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. வெறும் 1550 கிலோ எடை கொண்ட இது, 0-100 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த காரில் ஃபோர்-வீல் டிரைவ் மற்றும் ஃபோர்-வீல் ஸ்டியரிங் பொருத்தப்பட்டுள்ளது. Aventador Ultimae coupe 0-100 kmph வேகத்தை 2.8 வினாடிகளில் அடையும் அதே வேளையில் 0-200 kmph வேகத்தை 8.7 வினாடிகளில் எட்ட கூடிய சில நம்பமுடியாத செயல்திறனை கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 355 கிமீ ஆகும்.உட்புறத்தில் Aventador Ultimae Coupe-ன் கேபினில் சீட் பெல்ட்கள் உள்ளிட்டவை எக்ஸ்டீரியர் கலருக்கு மாற்றாக ஸ்டிச்சிங் கலரை கொண்டுள்ளது. அதே நேரத்தில் வாகனத்தின் ரிம்ஸ்கள் வாடிக்கையாளர் தனக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். சீட்கள் லேசர் பொறிக்கப்பட்ட அல்காண்டராவால் மூடப்பட்டிருக்கும், இது இந்த லிமிட்டட் சீரியஸிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. MMI சரவுண்ட், கதவு கைப்பிடிகள் மற்றும் இருக்கை பின்புறங்கள் அனைத்தும் கார்பன் ஃபைபரால் மூடப்பட்டிருக்கும். இந்த சூப்பர் காரில் கஸ்டமைசபிள் TFT டிஜிட்டல் டேஷ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் driver modes-களை காட்டுகிறது மற்றும் காரில் உள்ள கனெக்டிவிட்டியை கட்டுப்படுத்த உதவுகிறது.

Also Read : இரு சக்கர வாகன ஓட்டிகளே உஷார்...  இந்த வகை ஹெல்மெட் அணிந்தால் அபராதம்.! 

இந்த கார் Apple CarPlay கனெக்டிவிட்டியை பெறுகிறது, இது வாய்ஸ் ஆக்டிவேட்டட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட்ஸ்களை நிர்வகிக்க உதவுகிறது. Lamborghini Aventador LP 780-4 Ultimae Coupe கார் Corsa, Sport, Strada மற்றும் Eco ஆகிய 4 டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது.

Also Read : ரூ.60 ஆயிரம் வரை அதிரடி ஆபர்களை அறிவித்த ரெனால்ட்.! 

லம்போர்கினி இந்தியாவின் தலைவர் ஷரத் அகர்வால் கூறுகையில், இது இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிக சக்திவாய்ந்த அவென்டடார் ஆகும், மேலும் இந்தியாவில் உள்ள எங்கள் லம்போர்கினி வாடிக்கையாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, India

அடுத்த செய்தி