நாட்டில் சமீப மாதங்களாக அதிகரித்து வரும் மின்சார வாகனங்களுக்கான நுகர்வோர் தேவையை கருத்தில் கொண்டு மேலும் பல முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்கால திட்டங்களையும் தயாரிப்புகளையும் Electric Mobility செக்மென்டில் வெளிப்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த பட்டியலில் பிரபல ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் KTM சேர உள்ளது.
Duke மற்றும் KTM RC போன்ற அக்ரசிவ் பைக்குகள் மூலம் இந்திய பைக் சந்தையை கைப்பற்றிய பிறகு, ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான KTM இப்போது எலெக்ட்ரிக் பைக் செக்மென்ட்டில் நுழைய முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் E-Duke எனப்படும் ஆல்-எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே சில அறிக்கைகளின் படி, மின்சார வாகன சந்தையில் கவனம் செலுத்தி வரும் KTM இந்த ஆண்டு எலெக்ட்ரிக் டியூக் (electric Duke) அல்லது இ-டியூக் (e-Duke) பைக்கை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also read: கனடாவில் 1970க்கு பிறகு அவசர நிலை பிரகடனம்... தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ...
KTM-ன் தாய் நிறுவனமான Pierer Mobility, ஆல்-எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தி உள்ளது. டியூக்கை போலவே KTM அதன் வரவிருக்கும் எலெக்ட்ரிக் பைக்கிற்கும் நேக்ட் லுக்கை கொடுக்கும் என்று தெரிகிறது. பைக்கைப் பற்றி அதிகம் வெளியிடாமல், மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர் E-Duke விரைவில் சந்தையில் நுழையப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். எலெக்ட்ரிக் பைக்கைப் பற்றிய தகவல்களை அதிகம் வெளியிடாத நிலையில், மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான KTM, விரைவில் அதன் E-Duke-ஐ சந்தையில் அறிமுகம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Also read: Work From Home மூலமாக 6 நிறுவனங்களில் முழு நேர ஊழியராக பணியாற்றும் இளைஞர் - விரைவில் கோடீஸ்வரன் ஆவேன் என்கிறார்.. எப்படி சாத்தியம்?
E-Duke-ஐ தவிர மேலும் 2 எலெக்ட்ரிக் பைக்குகள் டெவலப்மென்ட்டில் உள்ளன என்பதை Pierer Mobility உறுதிப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் KTM E10 அடங்கும், இது ஒரு யூத் டர்ட் பைக் ஆகும், மற்றது Freeride E LV, இது ஒரு ஸ்க்ராம்ப்ளர் என்று கூறப்படுகிறது. இதனிடையே E-duke எலெக்ட்ரிக் பைக்கானது ஃபிக்ஸ்ட் 5.5 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும், E-Duke ஆனது 10kW மோட்டார் மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது 13.4 bhp ஆற்றலை உற்பத்தி செய்யும். மேலும், இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரை KTM பைக்குகள் அவற்றின் ஈர்க்கக்கூடிய பவர் டெலிவரி மற்றும் பஞ்சி டார்க்கிற்கு பெயர் பெற்றவை. KTM நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் பைக்கின் விவரங்களைப் பற்றி அதிகம் வெளியிடவில்லை என்றாலும், அதன் Duke 125 போன்ற செயல்திறனை E-Duke கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று Rushlane தகவல் தெரிவித்துள்ளது. கூடுதலாக, E-Duke ஆனது KTM இன் ஸ்வீடிஷ் நிறுவனமான Husqvarna's E-Pilen-ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.
E-Duke-ஐ அடிப்படையாக கொண்ட ஆல்-எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்துவதற்கு பஜாஜ் நிறுவனம் உதவக்கூடும். E-Duke மற்றும் E-Pilen ஆகியவை இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்தால், அவை மகாராஷ்டிராவின் Akurdi-யில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் புதிய உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.