ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியாவில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் KTM-ன் Chicago Disc 271 சைக்கிள்.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தியாவில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் KTM-ன் Chicago Disc 271 சைக்கிள்.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

KTM-ன் Chicago Disc 271 சைக்கிள்.!

KTM-ன் Chicago Disc 271 சைக்கிள்.!

KTM Chicago | நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஆக்டிவ் லைஃப் ஸ்டைல் பிராண்டுகளில் ஒன்றான நைன்ட்டி ஒன் சைக்கிள்ஸ் நிறுவனம், கேடிஎம் சிகாகோ டிஸ்க் 271 சைக்கிளை புதிதாக அறிமுகம் செய்து உள்ளது.

நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஆக்டிவ் லைஃப் ஸ்டைல் பிராண்டுகளில் ஒன்றான நைன்ட்டி ஒன் சைக்கிள்ஸ் (Ninety One Cycles) நிறுவனம், சமீபத்தில் கேடிஎம் சிகாகோ டிஸ்க் 271 (KTM Chicago Disc 271) சைக்கிளை புதிதாக அறிமுகம் செய்து உள்ளது.

Ninety One Cycles நிறுவனம் இந்தியாவில் KTM bicycles நிறுவனத்துடன் பிரத்யேக பார்ட்னர்ஷிப்பை கொண்டுள்ளது. இந்நிலையில் KTM Chicago Disc 271 சைக்கிளை ரூ.62,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்வதாக நைன்ட்டி ஒன் சைக்கிள்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 26 அன்று அறிவித்து உள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள KTM Chicago Disc 271 ஒரு புதிய MTB (Mountain bikes) பைக் என்று நிறுவனம் கூறுகிறது. புதிய சிகாகோ டிஸ்க் 271 தயாரிப்பானது இந்திய சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் சுமார் 500 நகரங்களில் 1000-க்கும் மேற்பட்ட ரீட்டெயில் ஸ்டோர்களுடன் நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக இருக்கிறது.

Ninety One Cycles. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் சைக்கிள்ஸ், பர்ஃபாமென்ஸ் பைக்ஸ், மவுன்டைன் பைக்ஸ், ஃபேட் டைர் பைக்ஸ், ஹைபிரிட் பைக்ஸ் மற்றும் கிட்ஸ் பைக்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய MTB-ஆன சிகாகோ டிஸ்க் 271, உறுதியான மற்றும் TL இணக்கமான ரிம்ஸ்களுடன் வருகிறது. சிகாகோ சீரிஸில் KTM-ன் சமீபத்திய இந்த தயாரிப்பு SCHWALBE 27.5-இன்ச் டயர்களை கொண்டுள்ளது. இவை சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எந்த நிலப்பரப்பிலும் செல்வதற்கு தேவையான கிரிப்பை வழங்குகிறது.

மவுன்டன் பைக்கிங்கிற்காக இதில் KTM-ன் லைன் ரைசர் 680 மிமீ ஹேண்டில் பார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் M (17-inch), L (19-inch) மற்றும் XL (21-inch) ஆகிய 3 ஃபிரேம் சைஸ்களில் கிடைக்கிறது. இந்த வெவ்வேறு ஃப்ரேம் சைஸ்கள் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் வசதியைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன. KTM Chicago Disc 271-ன் எடை 14.7 கிலோ ஆகும். இந்த சைக்கிளானது அதன் லைட் வெயிட் மாடல்களில் ஒன்றாக வெளிவருகிறது. இது Suntour லாக் இன் / அவுட் சஸ்பென்ஷன் செட்டப்பை பயன்படுத்துகிறது. இதன் முன் பக்கத்தில் Shimano MT200 2-பிஸ்டன் முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக் அமைப்பைப் பயன்படுத்துகிறது. பிரேக்குகள் விரைவான மற்றும் சறுக்கல் இல்லாத பிரேக்கிங் அனுபவத்திற்காக கூடுதல் பிரேக்கிங் பவரை வழங்குகிறது.

இதனிடையே Ninety One நிறுவனத்தின் இணை நிறுவனரும் , தலைமை நிர்வாக அதிகாரியுமான சச்சின் சோப்ரா கூறுகையில், KTM-ன் லேட்டஸ்ட் பிரீமியம் MTB பைக்கான சிகாகோ டிஸ்க் 271-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நுகர்வோருக்கு உயர்தரத்தில் சிறப்பாக டிசைன் செய்யப்பட்ட தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். KTM உடனான எங்கள் வெற்றிகரமான பார்ட்னர்ஷிப் இதற்கு உதவுகிறது என்றார்.

First published:

Tags: Cycling