• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகளவில் வெளியான KTM 890 Duke பைக்! அதன் சிறப்பம்சங்கள் இதோ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகளவில் வெளியான KTM 890 Duke பைக்! அதன் சிறப்பம்சங்கள் இதோ..

KTM 890 Duke பைக்

KTM 890 Duke பைக்

கேடிஎம் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது சமீபத்திய மாடலான 890 Duke-ஐ தற்போது வெளியிட்டுள்ளது.அதன் சிறப்பம்சங்கள் இதோ.

  • Share this:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த KTM நிறுவனம்  தயாரிக்கும் Duke பைக்குகளுக்கு உலகளவில் வரவேற்பு இருந்து வருகிறது. துள்ளலான வடிவம், சக்திவாய்ந்த செயல்திறன் ஆகியவற்றால் இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த பைக்கிற்கு பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது சமீபத்திய மாடலான 890 Dukeஐ தற்போது வெளியிட்டுள்ளது.  'தி ஸ்கால்பெல்' என்று அழைக்கப்படும் 790 Duke, ஏற்கனவே ஒரு மிகப் பெரிய என்டர்டைன்மெண்ட் மிடில்வெயிட்டாக இருந்தது. இது சில கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த 890 Duke ஆனது 790 Duke ஐ விட சூப்பராகவும், மிகவும் சக்திவாய்ந்த வேரியண்ட்டான 890 Duke R ஐ விட சற்று குறைந்த திறனையும் கொண்டுள்ளது. 

இருப்பினும், KTM 790 ஆனது Euro 5 தரநிலைகளை அப்டேட் செய்யாததால் இந்த தயாரிப்பு நிறுத்தப்பட்டது. புதிய 890 Duke 2021 ஆம் ஆண்டிற்கான அட்டகாசமான லான்ச்களில் ஒன்றாகும். Duke 890 ஒரு ஸ்லோப்பிங் பியூஎல் டாங்க் ஒரு பிட் ஸ்டெப் அப் சிட் மற்றும் இரண்டு மேம்பட்ட வெளியேற்றங்களைக்  கொண்டுள்ளது.  

இந்த பைக்கை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை : 

டிசைன் :

புதிய 890 Duke ஆனது 790 Dukeக்கிற்கு ஒத்துப்போகும். LED ஹெட்லைட்,  பியூஎல் டாங்க் , பிளாஸ்டிக் டாங்க் எக்ஸ்டன்சன் மற்றும் சீட்டுகள்  ஆகியவை இந்த இரண்டு மாடல்களுக்கான ஒற்றுமைகள் ஆகும். சீட்டின் உயரம் 820 மிமீ, இது 790 மாடலை விட 5 மிமீ குறைவாக உள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ்: 

பைக்கின் முழு Bosch EMS யூனிட் அப்டேட் செய்யப்பட்டு 6D லீன் ஆங்கிள் சென்சாரையும் கொண்டுள்ளது. பைக்கின் இரண்டு பக்கங்களிலும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட டபுள்யூபி அபேஸ் சிஸ்டம்ஸ் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. அதேபோல பைக்கின் முன்சக்கரத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் சிங்கிள் 240 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.

விலை மற்றும் கலர்ஸ்கள் :

இந்த பைக் பிளாக் மற்றும் ஆரஞ்சு என இரண்டு கலர்களில் வெளி வருகிறது. பைக்கின் விலை ரூ .8.5 லட்சம் முதல் ரூ .9.5 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதர அம்சங்கள்:

890 Duke பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல், லாஞ்ச் கன்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோடுகளை கொண்ட வசதி, ஏபிஎஸ் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதுதவிர LED முகப்பு விளக்குகள், டி.ஆர்.எல் எல்.இ.டி விளக்குகள், LED பின்பக்க விளக்குகள், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய டிஎஃப்டி டிஸ்பிளே போன்றவை கவனத்தை ஈர்க்கின்றது. 

எஞ்சின் : 

இந்த பைக்கின் எஞ்சின், 890 Duke Rக்கு இருப்பதை போலவே உள்ளது. இது 889 CC, பேரலல் -ட்வின் , லிக்குவிட்-கூல்டு எஞ்சினையும் கொண்டுள்ளது. மேலும் இது 115HP உச்ச சக்தியையும் 91Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இருப்பினும், இது Duke 890 R உடன் கம்பேர் செய்யும்போது 6HP மற்றும் 7Nm குறைவாகவே உள்ளது, மேலும் 121HP மற்றும் 98Nm பீக் அவுட்புட்களை வழங்குகிறது. 

இந்த பைக் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, விரைவில் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வரவும் வாய்ப்புள்ளது. Duke சிரீஸில் இந்த பைக் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். இந்த பைக் முந்தைய பைக் மாடல்கள் போலவே காட்சியளித்தாலும், 890 Duke R பைக்கின் பல்வேறு வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் 790 Duke மற்றும் 890 Duke R மாடல்களை வேறுபடுத்தி காண முடிகிறது.

 

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: