இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது KTM 790 Duke- லிமிடெட் எடிஷன் என்பதால் ரசிகர்கள் வேதனை!

KTM 790 Duke

ட்ராக் மோட் மட்டுமல்லாது ஸ்போர்ட், ஸ்ட்ரீட் மற்றும் ரெயின் ஆகிய மூன்று ட்ரைவிங் மோட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் KTM 790 Duke பைக் 8.64 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், இந்தியாவுக்கு லிமிடெட் எடிஷன் விற்பனை என்பதால் KTM ரசிகர்கள் சற்றே வருத்தமடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

முதன்முறையாக கடந்த 2018-ம் ஆண்டு மிலன் நகரில் ஆட்டோ கண்காட்சி ஒன்றில் KTM 790 Duke அறிமுகம் செய்யப்பட்டது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ட்யூக் பைக் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் KTM 790 Duke பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 799cc LC8c  பவர்ப்ளான்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

6 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக்கின் திறன்105 hp ஆகவும் டார்க் வெளியீடு 86 Nm ஆகவும் உள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் KTM 790 Duke பைக்குக்கான முன்பதிவு தொடங்கியது. வாடிக்கையாளர்கள் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்தனர். ஆனால், இந்தியாவில் கிடைக்க வேண்டிய அனுமதிகள் தாமதமானதால் வெளியீடும் தாமதமாகியுள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவில் ‘சாரி கார்டு’ உடன் KTM 790 Duke பைக் ஒன்று தென்பட்டது. இதனால் இந்தியாவுக்கு ஏற்ற வடிவமைப்பு உடனே KTM 790 Duke வெளியாகும் எனக் கூறப்பட்டது. தோற்றத்தின் அடிப்படையில் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையிலேயே KTM 790 Duke-ம் உள்ளது.

கூடுதல் தொழில்நுட்ப அப்டேட்களாக ட்ராக் மோட், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், க்விக் ஷிஃப்ட், மோட்டார் ஸ்லிப் ரெகுலேட், சூப்பர்மோட்டோ மோட், ஏபிஎஸ் எனப் பல இணைப்புகள் உள்ளன. ட்ராக் மோட் மட்டுமல்லாது ஸ்போர்ட், ஸ்ட்ரீட் மற்றும் ரெயின் ஆகிய மூன்று ட்ரைவிங் மோட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: இந்தியாவின் முதல் Jeep க்ராண்ட் செரோக்கி SRT கார் - முதல் பயணத்தைத் தொடங்கிய தோனி!

சென்னையில் கொள்ளையடித்த 10 வடமாநிலக் கொள்ளையர்கள் கைது!
Published by:Rahini M
First published: