இந்தியாவில் KTM 250 Adventure இருசக்கர வாகனம் இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு..

இந்தியாவில் KTM 250 Adventure இருசக்கர வாகனம் இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு..

கேடிஎம்

இந்த இருசக்கர வாகனத்தின் டயர்கள் அதன் முன்னோடி பைக்குகளை விட மெலிதாக இருக்கும். அறிக்கையின்படி, அனைத்து புதிய KTM 250 Adventure இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இரு சக்கர வாகனம் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என்று ஊகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  250 DUKE என்பது KTM இன் குவாட்டர்-லிட்டர் ஸ்ட்ரீட் பைக் ஆகும், இது அதன் 200 DUKE மற்றும் 390 DUKEக்கிற்கு இடையில் விலை, அம்சங்கள் மற்றும் இதர பாகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் 2020-ஆம் ஆண்டில் LED ஹெட்லைட் வடிவத்தில் மேம்படுத்தலைப் பெற்றுள்ளது, இது 390 DUKEக்கின் அலகுக்கு ஒத்ததாகும். புதிய LED ஹெட்லைட் குவாட்டர்-லிட்டர் மோட்டார் சைக்கிளுக்கு இன்னும் பிரீமியம் தோற்றத்தை சேர்க்கிறது.

  இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள KTM 250 Adventureல் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. KTM மோட்டார் சைக்கிளின் வெளியீடு எதிர்காலத்தில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் பைக்கின் புகைப்படங்களை India Today செய்தியில் வெளியிட்டுள்ளது, மேலும் KTM 250 Adventureன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கியுள்ளதாக அந்த போர்டல் தெரிவித்துள்ளது. அதன்படி வெளியான வாகனத்தின் படத்தில், 250CC டூயல்-ஸ்ப்போர்ட் மோட்டார் சைக்கிள் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. 

  வாகனத்தின் அமைப்பும்,  நிறமும் நிச்சயமாக KTM இன் நிறம் தான. அந்த அறிக்கையின்படி, பைக் கருப்பு நிற மாறுபாட்டுடனும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KTM 250 Adventureன் ஸ்பை ஷாட்களும் இந்த பைக்கில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் 5.0 இன்ச் TFT ஸ்கிரீனுடன் உள்ளதை காட்டுகிறது. இந்த பைக்கின் விலை ரூ. 2.30 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீட்களை பொறுத்தவரை, விரைவில் அறிமுகம் செய்யப்படும் இரு சக்கர வாகனம் பிளவு இருக்கை ஏற்பாட்டை (Split Seat Arrangement) கொண்டிருக்கும், மேலும் ஸ்ப்ளிட்டானது பின்புற கிராப் ரெயில்களையும் கொண்டிருக்கும்.

  சீரான ரைடுக்காக சீட் நிமிர்ந்து நிதானமாக இருக்குமாறு வைக்கப்பட்டுள்ளது, இதனால் KTM 250 சாகச பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும். இந்த எஞ்சின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஸ்லிப்பர் கிளட்சினால் பயனடைகிறது. ஸ்லிப்பர் கிளட்ச் அம்சம், பின் சக்கரத்தை லாக் செய்வதைத் தடுக்கிறது. குவாட்டர் லிட்டர் மோட்டார் சைக்கிள் கூர்மையான மற்றும் கடினமான ஸ்டைலிங்கை கொண்டுள்ளது தனிச் சிறப்பு. 

  Also read... தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த புகார்களை பதிவு செய்வது எப்படி?  கலர் பேலேட் இரண்டு விருப்பங்களை உள்ளடக்கியது - சில்வர் மெட்டாலிக் மற்றும் டார்க் கால்வானோ ஆகும். இந்த மோட்டார் சைக்கிள் ஒற்றை சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷனிற்கு, 6-வேக கியர்பாக்ஸ் உள்ளது. KTM 250 Adventure எரிபொருள் உட்செலுத்தலுடன் வருகிறது, இது அதிகபட்சமாக 30bhp ஆற்றலையும், 24Nm பீக் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. 

  இந்த இருசக்கர வாகனத்தின் டயர்கள் அதன் முன்னோடி பைக்குகளை விட மெலிதாக இருக்கும். அறிக்கையின்படி, அனைத்து புதிய KTM 250 Adventure இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இரு சக்கர வாகனம் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என்று ஊகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், RTO ஹோமோலோகேஷன் செயல்பாட்டில் சில தாமதங்கள் காரணமாக, லான்ச்சை தள்ளி வைக்க வேண்டியிருந்தது என தகவல் அளித்துள்ளனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: