KTM அட்வென்சர் பைக்குகளின் விலை அதிரடி குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கே.டி.எம் நிறுவனம் 250 அட்வென்சர் பைக்குகளின் விலையில் 25 ஆயிரம் ரூபாயை அதிரடியாக குறைத்துள்ளது.

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கே.டி.எம் நிறுவனம் 250 அட்வென்சர் பைக்குகளின் விலையில் 25 ஆயிரம் ரூபாயை அதிரடியாக குறைத்துள்ளது.

  • Share this:
கே.டி.எம் நிறுவனம் அட்வென்சர் 250 மாடலை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகளின் விற்பனை புரோமோஷனை தொடங்கியுள்ள அந்த நிறுவனம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஸ்பெஷல் புரோமோஷன் விலையை அறிவித்துள்ளது. இந்த நாளில் கே.டி.எம் பைக்குகளின் அட்வென்சர் 250 மாடலை புக் செய்பவர்களுக்கு 2.30 லட்சம் ரூபாயில் பைக் கிடைக்கும். அதாவது அறிமுகப்படுத்தப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து ரூ.25 ஆயிரத்தை கே.டி.எம் நிறுவனம் குறைத்துள்ளது.

250 அட்வென்சர் பைக்கின் மாடலைப் பொறுத்த வரை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அட்வென்சர் 390 மாடலைப்போன்று உள்ளது. 248 சிசி என்ஜின் கொண்ட இந்த பைக்கில் ஹாலோஜன் ஹெட்லைட், எல்.இ.டி ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக எல்.இ.டி டிஆர்எல், மற்றும் எல்.இ.டி இன்டிக்கேட்டர்கள், ஸ்பிளிட் ஸ்டைல் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பி.எஸ் விஐ கம்ப்ளைன்ட் கொண்ட 250 அட்வென்சரில் சிங்கிள் சிலிண்டர் உள்ளது. லிக்விட் கூல்டு என்ஜினாக இருப்பதால் 29.5 பிஹெச்பி பவர் மற்றும் 24 என்.எம் டர்கியூ கிடைக்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸூடன், கிளர்ச்சின் உதவியும் கிடைக்கும். 390 அட்வென்சரைப் போல், புதிய 250 அட்வென்சரில் குயிக்ஷிப்டு ஆப்சன் கிடையாது. 19 இன்ச் மற்றும் 17 இன்ச்களில் முன்பக்கம் ரியர் காஸ்ட் வீல்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஜாஜ் அட்டோ லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் சுமீத் நராங் பேசும்போது, கே.டி.எம் அட்வென்சர் 250 பைக் ரைடிங் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என கூறியுள்ளார். இந்த பைக் ரைடிங் விரும்பத்தகுந்த அனுப்பவத்தையும், புதிய பீலையும் கொடுக்கும் என கூறியுள்ள அவர், வார இறுதி நாட்களில் நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும் எனக் கூறியுள்ளார். நகரம் மற்றும் பைப்பாஸ்களில் சிறந்த ரைடிங் அனுபவத்தை கே.டி.எம் அட்வென்சர் 250 கொடுக்கும் என சுமீத் நராங் தெரிவித்துள்ளார். பல்வேறு புதிய டெக்னாலஜி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால், அட்வென்சர் என்ற பெயருக்கு ஏற்றமாதிரியாக ரைடிங் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Also read... ரூ.4.99 கோடி விலையில் லம்போர்கினி லேட்டஸ்ட் மாடல் அறிமுகம்!

ஓலா E ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - ரூ.499 செலுத்தினாலே போதும்!

அதிவேக பைக் ஓட்டுபவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என கூறியுள்ள சுமீத் நராங், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை முழுமையாக இருப்பதாக கூறியுள்ளார். பைக்கர்களின் எதிர்பார்ப்புக்கு மேலாக சாதாரண இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ஏற்றதாக கே.டி.எம் 250 அட்வென்சர் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த புரோமோஷன் விலை வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் எனத் தெரிவித்துள்ள அவர், நல்ல விற்பனையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அட்வென்சர் 250 எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: