• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • குரூயிசர் பைக்குகளை களமிறக்கும் கோமாகி - இந்தியாவின் முதல் எலக்டிரிக் பைக்!

குரூயிசர் பைக்குகளை களமிறக்கும் கோமாகி - இந்தியாவின் முதல் எலக்டிரிக் பைக்!

இந்தியாவின் முதல் எலக்டிரிக் பைக்

இந்தியாவின் முதல் எலக்டிரிக் பைக்

கோமாகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 ஸ்கூட்டர், மின்சார வாகனங்களில் நாட்டிலேயே மிகவும் மலிவு விலை ஸ்கூட்டடராக உள்ளது.

  • Share this:
இந்தியாவின் முதல் குரூயிசர் எலக்டிரிக் பைக்குகளை அடுத்த ஆண்டு களமிறக்க உள்ளதாக கோமாகி நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு ஆட்டோமொபைல் துறையினர் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன. கார்கள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை அனைத்தும் அடுத்த சில ஆண்டுகளில் மின்சாரத்தில் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கப்போகிறது. மத்திய, மாநில அரசுகளும் மின்சார வாகன தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகின்றன.

கார் மற்றும் ஸ்கூட்டர் வாகனங்களை உருவாக்குவதில் ஓலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு, தொழிற்சாலைகளைத் தொடங்கி தயாரிப்புகளையும் முடுக்கிவிட்டுள்ளனர். ஆனால், இரு சக்கர வாகனத்தில் மின்சார பைக்குகளை உருவாக்குவதில் பெரிய அளவில் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனை கோமாகி நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனம் அடுத்த ஆண்டு, அதாவது 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் எலக்டிரிக் பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு நான்கு ஸ்கூட்டர் வாகனங்களை இந்திய சந்தையில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் எலக்டிரிக் வாகன பிரிவின் இயக்குநர் குஞ்சன் மல்கோத்ரா, "மலிவான விலை, எளிதாக அணுகுமுறை என்ற இரு விஷயங்களை அடிப்படையாக வைத்து, வாகனங்களை வடிவமைப்பு செய்து வருவதாக தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே தங்களுடைய இலக்கு. பைக்கில் கோமாகியின் குரூயிசர் பைக்குகள் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். விலையும் அனைத்து தரப்பு மக்களும் உரிய வகையில் இருக்கும்" எனக் கூறினார்.

கோமாகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 ஸ்கூட்டர், மின்சார வாகனங்களில் நாட்டிலேயே மிகவும் மலிவு விலை ஸ்கூட்டடராக உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தங்கள் நிறுவனத்தை இந்தியாவில் விரிவுப்படுத்த கோமாகி முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப பல்வேறு மாநிலங்களும் எலக்டிரிக் வாகன உற்பத்திக்கான வாய்ப்புகளை திறந்துவிட்டிருப்பதை கோமாகி கவனமாக உற்று நோக்கி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த புரோஜெக்டுகளை இந்தியாவில் தொடங்கவும் தயாராகி வருகிறது.

Also read... டி.வி.எஸ் ஜூப்பிட்டர் முதல் ஹோண்டா ஆக்டிவா 6 ஜி வரை... Honda Dio-க்கு மாற்றாக டாப் 5 ஸ்கூட்டர்ஸ்!

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கோமாகி நிறுவனத்தின் தொடக்க விலை 42,500 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் 85 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்க முடியும். கபிரா மொபிலிட்டி கொல்லேஜியோ ஸ்கூட்டர் விலை ரூ.45,990 ஆக உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தால் 100 கிலோ மீட்டர் வரை செல்லும். அதேபோல, 48,540 ரூபாய் விலை கொண்ட ரஃப்தார் எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரும் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கலாம். கோமாகி க்‌ஷோன் ரூ.45,000, கோமாகி எக்ஸ்2 ரூ.47,000, வெலெவ் மோட்டார்ஸ் ரூ.32,500, ஆம்பியர் மேக்னஸ் புரோ ரூ.49,999 போன்ற ஸ்கூட்டர்களும் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: