FAME II போன்ற பாலிசிகள் மற்றும் பல மாநில அரசுகள் வழங்கும் மானியங்களால் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ வீலர் செக்மென்ட் வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டில் நிலவி வரும் எலெக்ட்ரிக் டூ வீலர்களுக்கான தேவை அதிகரிப்பு EV தயாரிப்பாளர்களை சந்தையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் டூவீலர்களாக கோமாகி (Komaki) நிறுவனத்தின் ரேஞ்சர் (Ranger) மற்றும் வெனிஸ் (Venice) ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் கோமாகி ரேஞ்சர் (Komaki Ranger) என்பது எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஆகும். அதே சமயம் கோமாகி வெனிஸ் (Komaki Venice) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
Komaki Electric Vehicles நிறுவனம் தனது முதல் பேட்டரி-பவர்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிளான ரேஞ்சர் மற்றும் இ-ஸ்கூட்டரான வெனிஸ் ஆகியவற்றை இந்திய சந்தையில் முறையே ரூ.1.68 லட்சம் மற்றும் ரூ.1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. Komaki Electric Vehicles நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த 2 புதிய எலெக்ட்ரிக் டூ வீலர் மாடல்களும் ஜனவரி 26 முதல் அனைத்து Komaki டீலர்ஷிப்களிலும் கிடைக்கும் என்று நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹரியானாவைத் தவிர நாடு முழுவதும் இந்நிறுவனம் 324 ஷோரூம்களை கொண்டுள்ளது.
Komaki நிறுவனத்தின் வெனிஸ் எலெக்ட்ரிக் டூ வீலர் ரெட்ரோ வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் உங்களுக்கு இதன் டிசைன் வெஸ்பாவை நினைவூட்டக்கூடும். இருப்பினும் நிறுவனத்தின் ரேஞ்சர் மாடலானது ஒரு முழு-எலக்ட்ரிக் க்ரூஸர் மோட்டார் சைக்கிள் என்றாலும் முதல் முறை இதை பார்க்கும் போது பெட்ரோலில் இயங்கும் மோட்டார் சைக்கிள் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். வெளிப்புறத்தில் குரோமின் விரிவான பயன்பாடு ரேஞ்சர் எலக்ட்ரிக் க்ரூஸர் மோட்டார் சைக்கிளின் ஒட்டுமொத்த அழகியலை மேலும் எடுத்து காட்டுகிறது.
கோமாகி எலெக்ட்ரிக் பிரிவின் இயக்குனர் குஞ்சன் மல்ஹோத்ரா கூறுகையில், "ரேஞ்சர் மற்றும் வெனிஸ் இறுதியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு தயாராகிவிட்டன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் க்ரூஸரை உருவாக்கியதன் மூலம் வரலாற்றில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளோம். ரேஞ்சர் மற்றும் வெனிஸ் இரண்டையும் மேம்படுத்தும் போது பிரீமியம் என்பது நாம் அதிகம் மனதில் வைத்திருந்தாலும், அவை இந்திய சந்தையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அணுக கூடியதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் மிகவும் நேர்மையான முயற்சியை மேற்கொண்டுள்ளோம்" என்றார். இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் க்ரூசர் என்ற பெருமையை ரேஞ்சர் பெற்றுள்ளது என்று Komaki Electric Vehicles நிறுவனம் தெரிவித்துள்ளது. 4,000-வாட் மோட்டார் மூலம் இயக்கப்படும், க்ரூஸர் பைக் 4 kw பேட்டரி பேக்குடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 180-220 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த பைக் மாடலில் ப்ளூடூத் சவுண்ட் சிஸ்டம், சைட் ஸ்டாண்ட் சென்சார், க்ரூஸ் கன்ட்ரோல் அம்சம், ஆண்டி-தெஃப்ட் லாக் சிஸ்டம் மற்றும் டூயல் ஸ்டோரேஜ் பாக்ஸுடன் அனைத்தையும் உள்ளடக்கிய பாகங்கள் உள்ளன.
மறுபுறம் ஒரு ரெட்ரோ ஸ்கூட்டரான Komaki வெனிஸ் ரவுண்டட் ஹெட்லேம்ப், குரோம் மிர்ரர்ஸ், ஸ்பிளிட் சீட்ஸ் மற்றும் சேஃப்ட்டி கார்ட்ஸ் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9 kWh பேட்டரி பேக் மற்றும் 4 bhp மின்சார மோட்டார் உள்ளது, இது ஒரு முழுசார்ஜில் 120 கிமீ ரைடிங் லிமிட்டை வழங்குகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.