ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

220 கிமீ ரேஞ்ச் உடன் கோமாகி டிடி 3000, எல்ஒய் இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்!

220 கிமீ ரேஞ்ச் உடன் கோமாகி டிடி 3000, எல்ஒய் இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்!

Komaki E - Scooters | கோமாகி எல்ஒய், இந்தியாவில் ஆன்டி-ஸ்கிட் செயல்பாட்டைப் பெற்ற முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வெளிவருகிறது.

Komaki E - Scooters | கோமாகி எல்ஒய், இந்தியாவில் ஆன்டி-ஸ்கிட் செயல்பாட்டைப் பெற்ற முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வெளிவருகிறது.

Komaki E - Scooters | கோமாகி எல்ஒய், இந்தியாவில் ஆன்டி-ஸ்கிட் செயல்பாட்டைப் பெற்ற முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வெளிவருகிறது.

கோமாகி (Komaki) நிறுவனம், இந்திய சந்தையில் அதன் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. அது கோமாகி எல்ஒய் (Komaki LY) மற்றும் கோமாகி டிடி 3000 (Komaki DT 3000) ஆகும். கோமாகி எல்ஒய் ஆனது கார்னெட் ரெட், ஜெட் பிளாக் மற்றும் மெட்டல் கிரே ஆகிய மூன்று வண்ணங்களின் கீழ் (எக்ஸ்-ஷோரூம்) ரூ.88,000 முதல் என்கிற விலையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கோமாகி டிடி 3000 ஆனது ஒரு வலுவான 3000 வாட் பிஎல்டிசி (BLDC) மோட்டார் மூலம் இயக்கப்படும் ஹை-ஸ்பெக் மாடல் ஆகும். இதன் விலை ரூ.1,22,500 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

கோமாகி டிடி 3000 மாடலின் பெயரில் உள்ள '3000" அந்த அதன் 3000 வாட் பிஎல்டிசி மோட்டாரிலிருந்து பெற்றுள்ளது. ஆனால் இந்த மோட்டார் 62வி52ஏஎச் லித்தியம் பேட்டரியிலிருந்து சக்தியூட்டப்படுகிறது. இந்த அளவிலான சக்தி "சந்தை எதிர்பார்ப்புகளை விட மிகவும் அதிகம்’ என்றும் கோமாகி நிறுவனம் விளம்பரம் படுத்துகிறது. இந்த மோட்டார் ஸ்கூட்டரை மணிக்கு 80 கிமீ வேகத்தில் செலுத்துகிறது, மேலும் இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்கூட்டர் ஃபுல் சைக்கிள் சார்ஜில் 180 - 220 கிமீ ரேன்ஜ் வரை அடையும். இந்த ஸ்கூட்டர் மெட்டல் க்ரே, டிரான்ஸுலென்ட் ப்ளூ, ஜெட் பிளாக் மற்றும் ஃப்ரைட் ரெட் ஆகிய நான்கு வெவ்வேறு வண்ணங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

கோமாகி எலக்ட்ரிக் பிரிவின் இயக்குனர் குஞ்சன் மல்ஹோத்ரா, “இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்ற பிறகு, எங்கள் க்ரீன் மற்றும் சஸ்டெயினபிள் மொபிலிட்டி சொல்யூஷன்களில் நம்பிக்கையைக் காட்டி, இந்தியச் சாலைகளை மீண்டும் பிரகாசிக்க இரண்டு புதிய இவி-களுடன் மீண்டும் வர உத்வேகம் பெற்றுள்ளோம். இம்முறை ரைடர்கள் - டிடி 3000 மாடலின் தனித்துவமான பேட்டரி மற்றும் எல்ஒய் ஆன்டி-ஸ்கிட் செயல்பாடுகளுடன் - இந்த பிரிவில் ஒப்பிடமுடியாத இரண்டு வாகனங்களை ஓட்டுவதில் பெருமை அடைவார்கள்" என்று கூறி உள்ளார்.

Also see... இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்

கோமாகி எல்ஒய், இந்தியாவில் ஆன்டி-ஸ்கிட் செயல்பாட்டைப் பெற்ற முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வெளிவருகிறது. மேலும் இந்நிறுவனம் இந்த புதிய செயல்பாட்டை விவரிக்கவில்லை என்றாலும், இது 'பாதுகாப்பான மற்றும் சீரான இயக்கத்தை உறுதி செய்கிறது' என்று கூறுகிறது. கோமாகி எல்ஒய் ஆனது ஒரே சார்ஜில் 90 கிமீ என்கிற ரேன்ஞ்சை வழங்கும் திறனை கொண்டுள்ளது.

இந்த இரண்டு புதிய ஸ்கூட்டர்களும் செல்ப்-டயக்நஸிஸ் டூல், டிஸ்க் பிரேக், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், நாய்ஸ்-ஃப்ரீ செயல்பாடு, ரிவர்ஸ் அசிஸ்ட், ரிமோட் லாக், டெலஸ்கோபிக் ஷாக்கர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற சில அம்சங்களுடன் வெளிவருகின்றன.

Also see... 3 வேரியண்ட்களில் 2022 டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

நினைவூட்டும் வண்ணம், இந்த ஆண்டு ஜனவரியில், கோமாகி நிறுவனம் அதன் ரேஞ்சர் க்ரூஸரையும், வெனிஸ் கிளாசிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியது. “எங்களின் லேட்டஸ்ட் மின்சார வாகனங்கள், அவற்றின் உயர் தரம், உயர் செயல்திறன், சிறந்த வலிமை, ஸ்போர்ட்டிவ் ஆன தோற்றம், குறைந்த பராமரிப்பு மற்றும் நீண்ட சர்வீஸ் லைஃப் ஆகியவற்றிற்காக சந்தையில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஒரு டஜன் அதிநவீன அம்சங்கள் மற்றும் மலிவு விலையுடன், கோமாகி வாகனங்கள் வாடிக்கையாளர்களின் பணத்திற்கான சிறந்த மதிப்பையும் வழங்குகிறது" என்றும் மல்ஹோத்ரா கூறி உள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Electric bike, Scooters