Home /News /automobile /

இந்த எலெக்ட்ரிக் காரை விட இந்த பேட்டரியின் விலை அதிகமாம்.!

இந்த எலெக்ட்ரிக் காரை விட இந்த பேட்டரியின் விலை அதிகமாம்.!

போல்ஸ்டார் 2 கார்

போல்ஸ்டார் 2 கார்

Polestar 2 Car | எலெக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரியால் இயங்குகின்றன. இந்த பேட்டரி பேக்குகளின் விலை மிகவும் அதிகம். ஆனால், ஒரு எலெக்ட்ரிக் காரை விட பேட்டரியின் விலை அதிகம் என்ற செய்தி வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உலகம் முழுவதும், ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. துறையையே தலைகீழ புரட்டிப் போடும் அளவுக்கு, எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில், ஆட்டோமொபைல் சந்தையில் புத்தம் புதிய அணிவகுப்புகளாக எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே பார்க்க முடியும். சுற்றுசூழல் மாசுபாடு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் உடனடி மாற்றாக உள்ளது.

இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், முதல் கார்கோ, சொகுசு கார்கள் வரை எல்லா வகையான வாகனங்களிலும், பெரும்பாலான நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. எலெக்ட்ரிக் கார்களின் விலையை பொறுத்தவரை, டீசல், பெட்ரோல் கார்களை விட அதிகம். இதற்குக் காரணம், எலெக்ட்ரிக் கார்களின் பாகங்கள் விலை அதிகமாக இருப்பது தான்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரியால் இயங்குகின்றன. இந்த பேட்டரி பேக்குகளின் விலை மிகவும் அதிகம். ஆனால், ஒரு எலெக்ட்ரிக் காரை விட பேட்டரியின் விலை அதிகம் என்ற செய்தி வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. போல்ஸ்டார் 2 என்ற எலக்ட்ரிக் காரின் பேட்டரியின் விலை காரின் விலையை விட அதிகம். இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.



Polestar 2 என்பது சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் விலை $43,000. இந்தக் கார் டூயல் மோட்டாரில் இயங்குகின்றது. சீனாவில் இந்தக் காரை பயன்படுத்தி வந்த நபர் ஒருவர், விபத்து ஏற்பட்டதால் காரின் பேட்டரியை மாற்ற வேண்டும் என்று கார் நிறுவனத்தை அணுகியுள்ளார். காரின் பேட்டரி பேக் உட்புறமாக வளைந்துள்ளதால், இனி பாதுகாப்பாக பயன்படுத்த முடியாது என்பதால் பேட்டரியை மாற்ற வேண்டும் என்ற தேவை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

Also Read : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.? 

போல்ஸ்டார் 2 வின் உரிமையாளர், பழுதடைந்த பேட்டரியை மாற்றக் கோரி, அதன் டீலர்ஷிப் நிறுவனத்தை அணுகி விவரத்தைக் கூறியுள்ளார். காரின் புதிய பேட்டரி பேக்கிற்கு ஒரு கொட்டேஷன் அனுப்பப்பட்டது. அதில், போல்ஸ்டார் 2 காருக்கு புதிய பேட்டரி பேக் இன்ஸ்டால் செய்ய, $79,200 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த விலையைப் பார்த்து அதிர்ந்து போனார் காரின் உரிமையாளர். காரின் விலையே $43,000 தானே, கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கிற்கு மேல் பேட்டரி பேக் குறிப்பிடப்பட்டுள்ளதே என்று கோரினார். கார் உற்பத்தி நிறுவனத்துக்கு இந்த செய்தி எட்டியது. அதற்கு போல்ஸ்டார் நிறுவனம், காரின் பேட்டரியின் விலை $57,900 தான், டீலர்ஷிப் நிறுவனம், காரின் ரிப்பேர் செலவுகளையும் மற்றும் பாகங்களுக்கும் சேர்த்து கட்டணம் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று அறிக்கையில் கூறியது. பேட்டரியின் விலை $57,900 என்பது கூட காரின் அசல் விலையை விட 30% அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read : ரூ.17.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டுகாட்டியின் புதிய Streetfighter V2

எலக்ட்ரிக் வாகனங்கள் லித்தியம்-ஐயன் பேட்டரிகளால் இயங்குகிறது, இது மிகவும் விலை உயர்ந்தது. எந்த விதமான எலெக்ட்ரிக் வாகனமாக இருந்தாலும், அதன் விலையில் மிகப்பெரிய தொகை பேட்டரியால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric car

அடுத்த செய்தி