முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ரூ.60 ஆயிரம் முன்பணம் செலுத்தினாலே போதும்... Tata Punch SUV கார் வாங்க சரியான நேரம்!

ரூ.60 ஆயிரம் முன்பணம் செலுத்தினாலே போதும்... Tata Punch SUV கார் வாங்க சரியான நேரம்!

டாடா பஞ்ச் எஸ்யூவி

டாடா பஞ்ச் எஸ்யூவி

டாடா பஞ்ச் எஸ்யூவியின் பேஸ் ப்யூர் வேரியண்ட் ஆனது, தற்போது ஷோரூம்களில் 5.67 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் டாடா பஞ்ச் எஸ்யூவி மாடல் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மலிவான விலை, சிறந்த பாதுகாப்பு அம்சம் ஆகியன டாடா பஞ்ச் எஸ்யூவியை யூசர்கள் விரும்ப காரணமாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் 10,532 டாடா பஞ்ச் எஸ்யூவி விற்பனையாகி 8வது இடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் காரின் தேவை இந்தியாவில் அதிகரித்து வருவதை அடுத்து, டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி வகையைச் சேர்ந்த இந்த வாகனத்திற்கு ஆரம்ப விலையாக 5.67 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பதிவு, காப்பீடு மற்றும் பிற கட்டணங்களுடன் நீங்கள் முழுமையாக செலுத்தலாம் அல்லது EMI விருப்பத்தைத் தேர்வுசெய்து சுமையைக் குறைத்து கொள்ளலாம்.

டாடா பஞ்ச் எஸ்யூவிக்கு வெறும் ரூ.60,000 முன்பணம் செலுத்தினால் குறைந்த EMI என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?. தோராயமாக 10% முன்பணம் செலுத்துவதோடு, ஆண்டுக்கு 9.8% வட்டி விகிதத்துடன் சராசரியாக 5 ஆண்டுகளுக்கு EMI செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நீங்கள் விரும்பிய கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல் அதிக அல்லது குறைவான முன்பணத் தொகையையும் தேர்வு செய்யலாம், ஆனால் இது EMI அளவை மாற்றும்.

டாடா பஞ்ச் எஸ்யூவியின் பேஸ் ப்யூர் வேரியண்ட் ஆனது, தற்போது ஷோரூம்களில் 5.67 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே டாடா மோட்டார்ஸின் காசிரங்கா எடிஷன் IRA ஆட்டோமேட்டிக் காராக இருந்தால் ரூ.9.48 லட்சம் வரை செல்லும். மாறாக, டாடா காரின் ஆன்ரோடு விலை (டெல்லி) ரூ.6.26 லட்சம் முதல் ரூ.10.60 லட்சம் வரையில் உள்ளது. இதன் மேனுவல் கார் விலை 8.69 லட்சம் ரூபாய் வரையும் ஆட்டோமேட்டிக் கார் 9.29 லட்சம் ரூபாய் வரையும் உள்ளது.

Also read... VRL லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து பல்க் ஆர்டரை பெற்ற டாடா மோட்டார்ஸ்!

டாடா பஞ்ச் எஸ்யூவியின் ஆரம்ப நிலை ப்யூர் வேரியண்ட்டை ஷோரூமில் ரூ.5.67 லட்சத்திற்கு வாங்க முடிவெடுத்தால், 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி தவணை முறையில் வாங்க நினைத்தால், மாதம் ரூ.11,974 EMI செலுத்த வேண்டியிருக்கும். மேலும் அடுத்த 60 மாதங்கள் அதாவது 5 ஆண்டுகளுக்கு 9.8 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த தவணைக் காலம் முடிந்து கணக்கிடும் பட்சத்தில், நீங்கள் டாடா பஞ்ச் எஸ்யூவிக்கு மொத்தம் 7 லட்சத்து 18 ஆயிரத்து 440 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.

மைக்ரோ எஸ்யூவி வகையைச் சேர்ந்த இந்த காரில் 1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் உடன் ஐந்து-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. செக்யூரிட்டி அம்சத்திற்காக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

First published:

Tags: Automobile, TATA