Home /News /automobile /

ராயல் என்பீல்டு இன்டர்செப்ட்டார், கான்டினென்டல் GT ஆகிய பைக்குகளின் இ.எம்.ஐ லோன் பற்றிய தகவல்கள் இதோ!

ராயல் என்பீல்டு இன்டர்செப்ட்டார், கான்டினென்டல் GT ஆகிய பைக்குகளின் இ.எம்.ஐ லோன் பற்றிய தகவல்கள் இதோ!

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

Royal Enfield | தற்போதைய நிலவரப்படி, ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மாடல் ரூ. 2.86 லட்சம் முதல் ரூ. 3.15 லட்சம் வரையில் விற்கப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு 650 வகையின் இரு முக்கிய மாடல்களாக பார்க்கப்படுபவை இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு பைக்குகளும் தான். இந்திய சந்தையில் இந்த விலைப் பட்டியலில் மிக பிரபலமான வண்டியாக இவை பார்க்கப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த இரண்டு பைக்குகளையும் வாங்குவதற்கு பலருக்கும் ஆர்வம் உள்ளது.

    ராயல் என்ஃபீல்டு பைக்குகள் தற்போது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் இரட்டை சிலிண்டர் எஞ்சினுடன் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த இரண்டு ராயல் என்ஃபீல்டு 650 சிசி பைக்குகளில் ஏதேனும் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், அவற்றின் விலை மற்றும் சராசரியான லோன் தொகை, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாங்குவது நல்லது.

    இண்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய ஆன்-ரோடு வண்டிகளை பலர் வாங்க விரும்புவதால் அது குறித்த இ.எம்.ஐ லோன் பற்றிய தகவல்களை விரிவாக தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியமானது. இதை எளிதாக்கும் முயற்சியில், சராசரியாக 3 வருட காலத்தை நிலையானதாக தேர்வு செய்து கொள்ளவும். அதனுடன் சுமார் 10% முன்பணம் செலுத்தும் தொகை மற்றும் மதிப்பிடப்பட்ட 10% வங்கி வட்டி விகிதம் ஆகியவற்றையும் கணக்கிட வேண்டும்.

    வண்டி வாங்குபவராகிய நீங்கள் எந்தக் காலத்திற்கான கடனைப் பெறுவீர்கள் என்பதை தீர்மானிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். அதே சமயம் வட்டி விகிதம் ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் மாறுபடும். மேலும், உங்கள் பைக் அல்லது காருக்கு அதிக அல்லது குறைந்த முன்பணம் செலுத்த நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இப்படி செய்வதால் உங்களின் மாதாந்திர தவணையான இ.எம்.ஐ குறையும்.

    Also Read : உலகின் தனிமையான தபால் நிலையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணிச்சலான பெண்

    தற்போதைய நிலவரப்படி, ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மாடல் ரூ. 2.86 லட்சம் முதல் ரூ. 3.15 லட்சம் வரையில் விற்கப்படுகிறது. அடுத்தாக கான்டினென்டல் ஜிடி 650 மாடல் பைக்கின் விலை ரூ. 3.06 லட்சம் முதல் 3.32 லட்சம் வரையிலும் விற்பனை ஆகிறது. இதன் அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

    இந்த இரண்டு பைக்குகளின் புது டெல்லி விலை ரூ.3.25 லட்சம் முதல் ரூ.3.49 லட்சம் வரையிலும், ரூ.3.43 லட்சம் முதல் ரூ.3.67 லட்சம் வரையிலும் உள்ளது. நீங்கள் கேன்யன் ரெட் நிறத்தில் உள்ள ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் ( இதன் எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ. 2.86 லட்சம்), 10% முதலீட்டின் வருவாயில் (ROI) 3 ஆண்டுகளுக்கு மாதத் தவணையாக ரூ.9,517 செலுத்துவீர்கள். மேலும் இதற்கு நீங்கள் ரூ.30,000 முன்பணமாக செலுத்த கூடிய முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

    இவை எல்லாவற்றையும் சேர்த்தால், உங்கள் லோன் காலம் முடிவதற்குள், நீங்கள் வாங்கிய பைக்கிற்கு ரூ. 3,72,612 செலுத்தி விடுவீர்கள். இதில் ஆன்-ரோடு விலை, முன்பணம் செலுத்தும் தொகை மற்றும் மேற்கூறிய கால அளவில் ஏற்பட்ட வட்டி ஆகியவையும் அடங்கும். அதன்படி ரூ.2,94,946 லோன் கடன் தொகைக்கு நீங்கள் செலுத்தும் மொத்த வட்டித் தொகை ரூ. 47,666 ஆகும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile, Royal enfield

    அடுத்த செய்தி