Home /News /automobile /

ஜனவரி 2022 : கார்களின் விலையை ரூ.54,000 வரை உயர்த்திய Kia நிறுவனம்!

ஜனவரி 2022 : கார்களின் விலையை ரூ.54,000 வரை உயர்த்திய Kia நிறுவனம்!

Kia கார்

Kia கார்

காம்பேக்ட் SUV செக்மென்ட்டில் Sonet மற்றும் Seltos ஆகிய 2 கார்களையும், ப்ரீமியம் MPV செக்மென்ட்டில் Carnival காரையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது கியா.

பல கார் தயாரிப்பாளர்களை போலவே தென் கொரியாவை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான கியா (Kia), இந்திய சந்தையில் அதன் தயாரிப்புகளின் விலைகளை மாற்றி அமைத்துள்ளது. தற்போது நம் நாட்டில் கியா நிறுவனம் மூன்று வெவ்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. காம்பேக்ட் SUV செக்மென்ட்டில் Sonet மற்றும் Seltos ஆகிய 2 கார்களையும், ப்ரீமியம் MPV செக்மென்ட்டில் Carnival காரையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது கியா.

இந்த நிலையில் Kia நிறுவனம் அதன் SUV-க்களான Sonet மற்றும் Seltos மற்றும் ப்ரீமியம் MPV மாடல் Carnival ஆகிய இரண்டின் விலைகளையும் கணிசமாக உயர்த்தியுள்ளது. மாடல் மற்றும் அதன் வேரியன்ட்டை பொறுத்து தற்போதைய இந்த விலை உயர்வுகள் ரூ.4,000 முதல் 54,000 வரை இருக்கிறது.

கேரன்ஸ் (Carens) என்ற மற்றொரு SUV மாடலை இந்திய சந்தையில் வெளியிட கியா தயாராகி வரும் நிலையில் ஏற்கனவே விற்கப்பட்டு வரும் கியா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன. குறைந்தபட்சம் ரூ. 50,000 உயர்ந்து உள்ள கியா கார்னிவல் வேரியன்ட்களின் விலையில் மிக பெரிய ஏற்றம் காணப்படுகிறது. மாடல் வாரியாக உயர்த்தப்பட்டுள்ள கியா கார்களின் விலைகளை இங்கே பார்க்கலாம்.

ALSO READ |  2021-ஆம் ஆண்டில் குளோபல் கிராஷ் டெஸ்ட்களில் தேர்ச்சி பெற்ற இந்திய கார்களின் பட்டியல்!

கியா கார்னிவல் (Kia Carnival):

கியா கார்னிவல் பிரெஸ்டீஜ் 7 சீட்டர், பிரெஸ்டீஜ் 6 சீட்டர் மாடல்களின் விலை ரூ.54,000 உயர்த்தப்பட்டு உள்ளன. அதேசமயம் தற்போதுள்ள அனைத்து ப்ரீமியம் எம்பிவி (premium MPV) மாடல்களின் விலையும் ரூ.50,000 அதிகம் ஆகும். சமீபத்திய விலை திருத்தத்துடன் கியா கார்னிவல் கார் இப்போது ரூ.24.95 லட்சம் தொடக்க விலையுடன் வருகிறது. இதன்டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 33.99 லட்சம் வரை இருக்கிறது.

கியா செல்டோஸ் (Kia Seltos):

1.5 லிட்டர் பெட்ரோல் HTE வேரியன்ட் தவிர மற்ற அனைத்து செல்டோஸ் கார் மாடல்களும் குறைந்தபட்சம் ரூ.9,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. SUV-யின் 1.5 லிட்டர் டீசல் மாடலின் எக்ஸ் லைன் வேரியன்ட் இப்போது ரூ.9,000 உயர்ந்துள்ளது. அதேசமயம் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலின் HTK வேரியன்ட் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலின் GTX+ DCT, GTX+ DCT டூயல் டோன் வேரியன்ட்டை வாங்குபவர்கள் முன்பை விட கூடுதலாக ரூ.11,000 செலவழிக்க வேண்டும். இவை தவிர மற்ற அனைத்து மாடல்களும் ரூ.10,000 விலை உயர்வை பெற்றுள்ளன.

ALSO READ |  பிரதமரின் பாதுகாப்பிற்காக ரூ.12 கோடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Mercedes-Maybach S650 Guard-ன் சிறப்பம்சங்கள்!

கியா சோனெட் (Kia Sonet):

கியா சோனெட்டும் ரூ.4,000 முதல் ரூ.24,000 வரை விலை உயர்வு பெற்றுள்ளது. Sonet-ன் என்ட்ரி-லெவல் 1.2-லிட்டர் பெட்ரோல் வேரியன்ட்கள் மிகச்சிறிய அளவில் விலை உயர்வுகளை பெற்றுள்ளன. HTK+ MT வேரியன்ட் ரூ.4,000 மற்றும் HTE மற்றும் HTK வேரியன்ட்களின் விலை ரூ.6,000 உயர்த்தப்பட்டுள்ளன. 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கு வரும் போது, HTX iMT ரூ.10,000, HTX+ iMT ரூ.4,000 மற்றும் GTX+ iMT ரூ.4,000 விலை உயர்த்தப்பட்டு உள்ளன.

HTK+ iMT, HTX DCT மற்றும் GTX+ DCT ஆகியவற்றின் விலைகள் மாறாமல் உள்ளன. Kia நிருவனம் Sonet-ன் அனைத்து பெட்ரோல் மாடல்களின் விலையையும் ரூ.6,000 உயர்த்தி உள்ளது. விலைகளை உயர்த்தியதுடன் பட்டியலிலிருந்து சிங்கிள்-டோன் மற்றும் டூயல்-டோன் பீஜ் கோல்டு கலர் ஆப்ஷனையும் நிறுத்தியுள்ளது கியா.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Car, Kia motors

அடுத்த செய்தி