• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 35 நாட்களில் 40 ஆயிரம் பேர் முன்பதிவு... வரலாறு காணாத சாதனையைப் படைத்த கியா செல்டாஸ்!

35 நாட்களில் 40 ஆயிரம் பேர் முன்பதிவு... வரலாறு காணாத சாதனையைப் படைத்த கியா செல்டாஸ்!

கியா செல்டாஸ்

கியா செல்டாஸ்

கியா செல்டாஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனால்ட் கேப்டுர், நிசான் கிக்ஸ், டாடா ஹேரியர் மற்றும் MG ஹெக்டார் ஆகிய கார்களுக்குக் கடும் போட்டியாக வந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவின் அதிகம் விரும்பப்பட்ட கார் ஆக கியா செல்டாஸ் கார் வளர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அறிமுகமானதிலிருந்து கியா செல்டாஸ்-க்கான வரவேற்பு நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. இதுவரையில் இல்லாத வகையில் கார் முன்பதிவில் வரலாறு காணாத சாதனையை செல்டாஸ் நிகழ்த்தியுள்ளது. அறிமுகமான 35 நாட்களில் சுமார் 40 ஆயிரம் பேர் செல்டாஸ் காருக்காக முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரையில் எந்த காருக்கும் இவ்வளவு போட்டி காணப்பட்டதில்லை. சமீபத்தில் வெளியான ஹூண்டாய் வென்யூ கார் 60 நாட்களில் 50 ஆயிரம் முன்பதிவுகளைக் கண்டதே சாதனையாக இருந்தது. இச்சாதனையை தற்போது கியா செல்டாஸ் கார் முறியடித்துள்ளது. இதனால் கொரிய கார் நிறுவனமான செல்டாஸ் தனது உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போதைய சூழலில் கியா செல்டாஸ் முன்பதிவு செய்தோருக்கான காத்திருப்புக் காலம் 2 மாதங்கள் ஆகும். ஆந்திராவில் உள்ள கியா தொழிற்சாலையில் கார் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. தேவை அதிகரித்து இருப்பதால் இரண்டாவது தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க கியா தயாராகி வருகிறது. மாதம் 10 ஆயிரம் கார்கள் வரை உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கியா செல்டாஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனால்ட் கேப்டுர், நிசான் கிக்ஸ், டாடா ஹேரியர் மற்றும் MG ஹெக்டார் ஆகிய கார்களுக்குக் கடும் போட்டியாக வந்துள்ளது.

மேலும் பார்க்க: விற்பனைக்கு வரும் ஹூண்டாய் எலான்ட்ரா... தொடங்கியது முன்பதிவு!

சீன கம்யூனிச அரசு உருவான 70-வது ஆண்டு நினைவு தின கொண்டாட்டங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: