ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் முன்னனி கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் தங்களின் புதிய மற்றும் பிரத்யேக மாடல் தயாரிப்புகளை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த கண்காட்சியில் அறிமுகம் ஆகும் புதிய மாடல் வாகனங்களை காண்பதற்காக கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ வரும் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நொய்டாவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக தயாராகி வரும் நிலையில் வாகன தயாரிப்பாளர்களும் தங்களின் புதிய மாடல்களுடன் தயாராக உள்ளனர்.
இந்த ஆண்டு கண்காட்சியில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் பல வேரியண்ட்டுகளில் பத்து வகையான புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. சொகுசான மிக விலை உயர்ந்த கார்களை இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது பட்ஜெட் வகை கார்களையும் அறிமுகம் செய்து வருகிறது. மேலும் கனிசமான வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது கியா தயாரிப்புகள். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கியா நிறுவனம் பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
தற்போது அதிரடியாக இந்த ஆண்டு பத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக கண்காட்சி நடைபெறும் அரங்கில் 3,150 சதுர அடி பரப்புள்ள அரங்கத்தை புக் செய்துள்ளது கியா நிறுவனம். இந்த கண்காட்சியில் கியா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள EV9 எலக்ட்ரிக் எஸ்யுவி கார் தான் அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 7 இருக்கைகள் கொண்ட மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்தக் கார் தயாரிக்கப்பட உள்ளது. அந்த கார் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதற்காக கார் பிரியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்கப்படும் இந்த கார் கியா நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பாக இருக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதோடு கார்னிவால் மாடலின் நியு ஜென் வேரியண்ட் காரும் இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பது தான் தங்களின் குறிக்கோள் என்கிறார் கியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டே ஜின் பார்க். ஆட்டோ எக்ஸ்போவிற்காக தயாராகி வருகிறது இந்தியா
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automatic car, Kia motors