• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 7 சீட்டர் செக்மென்ட்டில் கேம் சேஞ்சராக இருக்க போகும் கியாவின் ky MPV - 2022ல் இந்தியாவில் அறிமுகம்!

7 சீட்டர் செக்மென்ட்டில் கேம் சேஞ்சராக இருக்க போகும் கியாவின் ky MPV - 2022ல் இந்தியாவில் அறிமுகம்!

கியாவின்  ky MPV

கியாவின் ky MPV

புதிதாக தயாராகி வரும் இந்த 7 சீட்டர் கார் Kia KY என்ற பெயரில் தற்போது குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், இந்த வாகனம் உலக மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கியா கேரன்ஸ் (Kia Carens) என்று அழைக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

  • Share this:
தென் கொரியவை சேர்ந்த கார் தயாரிப்பாளரான கியா (Kia) நிறுவனம்SUV கார்களான சோனெட் (Sonet) மற்றும் செல்டோஸ் (Seltos) மூலம் இந்திய வாகன சந்தையில் தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதனிடையே நம் நாட்டில் கார் விற்பனையை துரிதப்படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறது. 2019-ஆம் ஆண்டில் இந்திய வாகன சந்தையில் நுழைந்ததிலிருந்து 3 வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ள கியா இந்தியா இப்போது அதன் நான்காவது மாடலை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

கியா நிறுவனம் ஏழு இருக்கைகள் (7 seater) கொண்ட பயன்பாட்டு வாகனத்தை தயார் செய்து வருகிறது. இதனை அடுத்த வருடத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால் தற்போது இங்கு கார் விற்பனையை துரிதப்படுத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிதாக தயாராகி வரும் இந்த 7 சீட்டர் கார் Kia KY என்ற பெயரில் தற்போது குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், இந்த வாகனம் உலக மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கியா கேரன்ஸ் (Kia Carens) என்று அழைக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கார் 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Alcazar காருக்கு சவால் விட கூடும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தயாராகி வரும் 7 சீட்டர் கார் பற்றி தகவல் தெரிவித்துள்ள கியா நிறுவனம், "கியா இந்தியா தனது புதிய தயாரிப்பான 'KY' ஐ 2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் அறிமுகப்படுத்தும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். KY உடன், எங்கள் வணிகம் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க எங்கள் அடுத்த வளர்ச்சிக் கட்டத்தை நாட்டில் தொடங்குவோம். இந்த மாடல் ஒரு எஸ்யூவி-யாக வடிவமைக்கப்பட்டாலும்,MPV-யின் இடத்தை வழங்கும் வகையில் இருக்கும்.

யுட்டிலிட்டி வெஹிகிள் வாங்க நினைக்கும் இந்தியர்களை கவரும் பல அம்சங்கள் இந்த காரில் இருக்கும்" என்றும் கூறி இருக்கிறது. உலகளவில் கியாவிற்கு இந்தியா மிக முக்கியமான சந்தையாகும், விற்பனை வாரியாக மட்டுமல்லாமல், உற்பத்தி மற்றும் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக இருக்கிறது. செல்டோஸ், சோனெட் மற்றும் கார்னிவல் ஆகிய தங்களது கார் மாடல்கள் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்று கியா இந்தியாவின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டே-ஜின் பார்க் (Tae-Jin Park ) செய்தியாளர்களிடம் கூறினார்.

Also read... இந்தியா முழுவதும் ஒரு லட்சம் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கத் திட்டம் - ஹீரோ நிறுவனம் அறிவிப்பு!

மேலும் பேசிய அவர் அடுத்த மாதம் ஆறு/ஏழு இருக்கைகள் கொண்ட Kia KY இன் உலகளாவிய பிரீமியர் மூலம் உள்ளூர் சந்தையில் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தொடங்க நிறுவனம் விரும்புகிறது என்றார்.
குறிப்பாக கோவிட்டிற்கு பிறகு இந்தியர்கள் வார இறுதியில் குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக பயணம் செய்ய அதிகம் விரும்புகிறார்கள். எனவே பெரிய சைஸ் கார்களுக்கான தேவையும், விருப்பமும் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. 7 சீட்டர் செக்மென்ட்டில் நாங்கள் அறிமுகப்படுத்த போகும் வாகனம் கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். குடும்ப பயணத்திற்கு புதுமையான, ஊக்கமளிக்கும் அனுபவத்திற்கான தேவையை வரவிருக்கும் தங்களது 7 சீட்டர் கார் பூர்த்தி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் டே-ஜின் பார்க்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: