நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியா, ஏப்ரல் 2022-ல் 19,000 யூனிட்டிற்கும் மேல் விற்பனையை பதிவு செய்து அசத்தி உள்ளது. இதன் மூலம் நாட்டின் முதல் 5 கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது கியா இந்தியா.
கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 2022-ல் கியா இந்தியா நிறுவனம் 19,019 யூனிட்டுகளை விற்று உளளது. கியா கடந்த மாதத்தை 6.5% சந்தைப் பங்குடன் முடித்த அதே நேரத்தில், ஆண்டுக்கு ஆண்டு (year-on-year) விற்பனையில் 18% நேர்மறையான வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. கியா இந்தியாவின் கடந்த மாத விற்பனை குறித்து துல்லியமாக சொல்வதென்றால்,19,019 யூனிட்களை நாட்டிலுள்ள அதன் டீலர்களுக்கு விற்பனைக்காக கியா இந்தியா அனுப்பியது. இதில் ஏப்ரல் 2022-ல் 7,506 யூனிட்களுடன் இந்தியாவில் அதிகம் விற்பனையான கியா கார் Seltos ஆகும். இதனை தொடர்ந்து 5,754 யூனிட்கள் விற்பனை ஆகி உள்ளது கியாவின் Carens கார். சப்-காம்பாக்ட் காரான Sonet 5,404 யூனிட் விற்கப்பட்டு உளள்து.
கியாவின் Carnival 355 யூனிட் விற்பனையை பதிவு செய்து உள்ளது. மேலும் கியா இந்தியா நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 2 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை தாண்டி உள்ளது. இதனிடையே நிறுவனம் சமீபத்தில் EV பிரிவில் நுழைவதை அறிவித்தது மற்றும் உலகளவில் கிடைக்கும் Kia EV6-ஐ விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதையும் உறுதிப்படுத்தியது. EV6-ன் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்றும் இதற்கான முன்பதிவு மே 26, 2022 அன்று தொடங்கும் என்றும் கியா இந்தியா ஏற்கனவே அறிவித்து உள்ளது.
இதனிடையே கியா இந்தியாவின் சேல்ஸ் % மார்க்கெட்டிங் தலைவர் ஹர்தீப் சிங் கூறியதாவது, இது எங்களுக்கு ஆரோக்கியமான ஆண்டாக உள்ளது. ஏனென்றால் கியா இந்தியா 2022-ல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20,000 யூனிட்களை விற்று வருகிறது. ஏப்ரல் 2021-ல் பதிவு செய்யப்பட்ட விற்பனையுடன் ஒப்பிடுகையில், கியா இந்தியா இந்த ஆண்டு 18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
Also Read : உங்கள் காரின் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்க உதவும் டாப் 5 டிப்ஸ்கள்!
2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்று தொடங்கியதில் இருந்து உலகளாவிய வாகனத் துறையானது விநியோக சங்கிலி துயரங்களை எதிர்த்துப் போராடும் கடினமான கட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் எங்களின் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு எங்களை உற்சாகப்படுத்தி வருகிறது. கார்களை புக் செய்து வாடிகையாளர்கள் காத்திருக்கும் காலத்தை மேலும் குறைக்க எங்கள் உற்பத்தியை தொடர்ந்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஹைடெக்கான கியா கார் EV6-ஐ விரைவில் கொண்டு வருகிறோம் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.