ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

கியா கார் மாடலில் இப்படி ஒரு சிக்கல்! ஏர்பேக் ஒர்க் ஆகல.. கார்களை திரும்பபெறும் நிறுவனம்!

கியா கார் மாடலில் இப்படி ஒரு சிக்கல்! ஏர்பேக் ஒர்க் ஆகல.. கார்களை திரும்பபெறும் நிறுவனம்!

கியா இந்தியா

கியா இந்தியா

Kia Carens | கியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘Kia Carens’ காரின் ஏர்பேக் கன்ட்ரோல் மாட்யூல் சாஃப்ட்வேரில் உள்ள பிழையை ஆய்வு செய்து சரி செய்யும் நோக்கத்திற்காக சுமார் 44,174 யூனிட்களை ரீகால் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான கியா, அதன் லேட்டஸ்ட் மாடல் காரான Carens-ன் சுமார் 44,174 யூனிட்களை ரீகால் செய்து உள்ளது. Kia Carens காரானது இந்திய சந்தைக்கான நிறுவனத்தின் இரண்டாவது MPV மற்றும் 2019-ல் இந்தியாவில் நுழைந்ததிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 5-வது தயாரிப்பு ஆகும். மாருதி சுசுகி எக்ஸ்எல்6, மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மாருதி சுசுகி எர்டிகா போன்ற மற்ற 7-சீட்டர் கார்களுடன் Kia Carens போட்டியிடுகிறது.

வாகன தொழிலில் Recalls என்பது ஒரு பொதுவான விதிமுறை. அதாவது வாகனத்தை திரும்பப்பெறுவார்கள். வாகனத்தில் உள்ள எந்தவொரு குறிப்பிட்ட கூறுகளின் முறையற்ற செயல்பாட்டிற்கும் வழிவகுக்கும் உற்பத்தி குறைபாடுகளை சரிசெய்ய பொதுவாக Recalls செய்யப்படுகிறது. அறிக்கைகளின்படி கியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘Kia Carens’ காரின் ஏர்பேக் கன்ட்ரோல் மாட்யூல் சாஃப்ட்வேரில் உள்ள பிழையை ஆய்வு செய்து சரி செய்யும் நோக்கத்திற்காக சுமார் 44,174 யூனிட்களை ரீகால் செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா கேரன்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.60 லட்சம் முதல் ரூ. 17.70 லட்சம் வரை உள்ளது.

இந்நிலையில் கியா இந்தியா நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கை ஒன்றில், ஒரு பொறுப்பான கார்ப்பரேட் என்ற முறையில், ஆய்வுக்காக வாகனங்களை தானாக முன்வந்து ரீகால் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக Voluntary Recall campaign ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் கீழ் தேவைப்பட்டால், சாஃப்ட்வேர் அப்டேட் இலவசமாக வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

எங்களது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பிராண்ட் அனுபவத்தை வழங்குவதன் மூலம் ஒரு சிறந்த உரிமை அனுபவத்தை வழங்க உறுதி பூண்டுள்ளோம் என்றும் கியா இந்தியா குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய தரநிலையால் நிர்வகிக்கப்படும் வழக்கமான சோதனைகள் மற்றும் காம்போனென்ட்ஸ்களின் பரிசோதனைகளை செய்து வருகிறோம். மேலும் நிறுவனம் விரைவில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை தனிப்பட்ட முறையில் அணுக தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read : குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் - 2022 யின் டாப் 5 பைக்குகளின் பட்டியல்!

அப்பாயின்மென்டிற்காக பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் Kia-வின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் நிறுவனம் கூறி இருக்கிறது. கூடுதலாக Carens வாடிக்கையாளர்கள் கியா இந்தியா வெப்சைட்டை பார்வையிடலாம் அல்லது கியா கால் சென்டரைத் தொடர்பு கொள்ளலாம். கியா கேரன்ஸ் 6 ஏர்பேக்ஸ் மற்றும் 7 சீட்ஸ் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் எஞ்சின் என மூன்று எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது, மேலும் மூன்று டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மேலும் கியா கேரன்ஸ் மூன்று எஞ்சின் தேர்வுகளுடன் வருகிறது, இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள், 5 வேரியன்ட்கள் மற்றும் 2 சீட்டிங் ஆப்ஷன்கள் (6 மற்றும் 7-சீட்டர்) ஆகியவை அடங்கும்.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Kia motors