Home /News /automobile /

நாட்டின் அதிவேக EV சார்ஜரை அறிமுகப்படுத்தி உள்ள Kia நிறுவனம்

நாட்டின் அதிவேக EV சார்ஜரை அறிமுகப்படுத்தி உள்ள Kia நிறுவனம்

கியா சார்ஜ்

கியா சார்ஜ்

Kia Motors | நாட்டில் EV உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு Kia India தனது முதல் படியை எடுத்து வைத்து உள்ளது.

    நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கியா இந்தியா (Kia India) நிறுவனம் பயணிகள் வாகனங்களுக்கான இந்தியாவின் அதிவேக சார்ஜரை (fastest charger) சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. குர்கானில் உள்ள தனது டீலர்ஷிப்பில் இந்த அதிவேக சார்ஜரை கியா இந்தியா அறிமுகம் செய்துள்ளது. டீலர்ஷிப்பிற்கு விசிட் செய்யவும், பயன்பாட்டிற்கு ஏற்ப பணம் செலுத்தி வாகனங்களை அதி வேகமாக சார்ஜிங் செய்து கொள்ளவும் வாடிக்கையாளர்களை வரவேற்பதாக கியா கூறியுள்ளது.

    இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் EV உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு Kia India தனது முதல் படியை எடுத்து வைத்து உள்ளது. மேலும் இதன் EV டீலர்ஷிப்களில் இந்த ஆண்டு அதிக சார்ஜிங் நிலையங்களையும் அமைக்கவுள்ளது. இதனிடையே 150 kWh திறன் கொண்ட இந்த DC ஃபாஸ்ட் சார்ஜர் குர்கானில் உள்ள Dhingra Kia-வில் நிறுவப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த மொபிலிட்டி சொல்யூஷன்களை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்த முயற்சி அனைத்து EV உரிமையாளர்களுக்கும் சார்ஜிங் தீர்வுகளுக்கான அணுகலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது நாட்டில் இருக்கும் அதிவேக சார்ஜர் இதுவாகும். மேலும் இது மாடல் மற்றும் சார்ஜிங் வேகத்திற்கான சப்போர்ட்டை பொறுத்து 42 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய உதவும் என்று கியா நிறுவனம் கூறுகிறது. கியா இந்தியாவின் தலைமை விற்பனை அதிகாரி மியுங்-சிக் சோன் பேசுகையில், "இந்த ஆண்டின் துவக்கத்தில் எங்களின் உலகளாவிய சிறந்த EV-யான Kia EV6-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தினோம். அடுத்த கட்டமாக தற்போது 150 kWh சார்ஜிங் திறன் கொண்ட பயணிகள் வாகனங்களுக்கான முதல் DC ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகப்படுத்தி உள்ளதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைகிறோம். இது இந்தியாவின் EV வளர்ச்சி பாதையில் எங்களின் முக்கிய பங்களிப்பாக இருக்கும்.

    Also Read : எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரை அரசே தள்ளுபடி... மாநில அரசின் ஆஃபரை பெறுவது எப்படி.?

    நாட்டில் உள்ள எங்களின் அனைத்து EV டீலர்ஷிப்களிலும் இணையற்ற EV அனுபவத்தை வழங்குவதற்கான பயணத்தை தொடங்கியுள்ளோம், மற்ற OEM-களில் இருந்தும் EV-க்களின் சார்ஜிங் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 12 நகரங்களில் மொத்தம் இது போன்ற 15 சார்ஜர்களை நிறுவுவோம். மேலும் இது போன்ற தங்களது நடவடிக்கைகள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அதிகரிக்கவும் உதவும் என்று தாங்கள் நம்புகிறோம்"என கூறியுள்ளார்.

    கியா இந்தியா சமீபத்தில் தனது முதல் ஃபர்ஸ்ட்-ஃபுல் எலெக்ட்ரிக் காரான Kia EV6-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ஒரு ஃபுல் சார்ஜில் 528 கிமீ தூரம் வரை செல்லும். இதனிடையே கியா இந்தியா நிலையான மொபிலிட்டி சொல்யூஷன்களை வழங்க உறுதிபூண்டுள்ளது மற்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க நாட்டில் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile, Kia motors

    அடுத்த செய்தி