Home /News /automobile /

மின்சார வாகனங்களுக்காக அதிவேக ‘240kWh’ சார்ஜரை கொச்சியில் அறிமுகப்படுத்தியது கியா நிறுவனம்!

மின்சார வாகனங்களுக்காக அதிவேக ‘240kWh’ சார்ஜரை கொச்சியில் அறிமுகப்படுத்தியது கியா நிறுவனம்!

கியா நிறுவனத்தின் வேகமான EV சார்ஜர் யூனிட்

கியா நிறுவனத்தின் வேகமான EV சார்ஜர் யூனிட்

இந்தியாவின் வேகமான EV சார்ஜர் யூனிட்டை கியா நிருவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India
    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவின் வேகமான மின்சார வாகன சார்ஜர் யூனிட்டை கேரள மாநிலம் கொச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் மின்சார வாகன ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை அமைக்கும் பணிகளில் கியா ஈடுபட்டுள்ளது.கியா இந்தியா நிறுவனம் மின்சார வாகனங்களுக்காக 240 kWh DC ஃபாஸ்ட் சார்ஜரை கொச்சியில் நிறுவி இருக்கிறது. இந்த DC ஃபாஸ்ட் சார்ஜர் கொச்சியில் உள்ள கியாவின் டீலர்ஷிப்பான Incheon Kia-வில் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த ஜூலை மாதம் மின்சார வாகன பயணிகள் கார்களுக்கான இந்தியாவின் அதிவேக சார்ஜரை (fastest charger) - “150kWh” குர்கானில் அறிமுகப்படுத்திய பிறகு, தற்போது 240 kWh DC ஃபாஸ்ட் சார்ஜரை கொச்சியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது கியா இந்தியா. கியா நிறுவனம் ஜூன் மாதம் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் வாகனமான EV6-ஐ அறிமுகப்படுத்தியது. எதிர்காலத்தில் இந்திய மார்க்கெட்டில் மேலும் பலமின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த கியா திட்டமிட்டுள்ளது.

    கொச்சியில் நிறுவப்பட்டுள்ள புதிய DC ஃபாஸ்ட் சார்ஜர் கியா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்ல. கொச்சி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் அனைத்து EV உரிமையாளர்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பயன்பாட்டிற்கு ஏற்ப பணம் செலுத்தி வாகனங்களை அதிக வேகமாக சார்ஜிங் செய்து கொள்ளலாம். கியா இந்தியாவின் தலைமை விற்பனை அதிகாரி Myung-sik Sohn கூறுகையில், இந்தியாவில் EV-க்களின் இயக்கம் மற்றும் பயன்பாட்டை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

    எங்களின் உலகளாவிய சிறந்த மின்சார வாகனமான Kia EV6 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு குர்கான் மற்றும் கொச்சியில் DC ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது இந்தியாவின் மின்சார வாகன வளர்ச்சிப் பாதையில் எங்கள் நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாக இருக்கும். இதன் மூலம் மற்ற OEM-களில் இருந்தும் மின்சார வாகனங்களின் சார்ஜிங் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

    Also Read : பலரின் கனவாக மாறியுள்ள உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்- எமிரேட்ஸ் A380 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

    கியா இந்தியாவில் EV6-ஐ கிட்டத்தட்ட ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹூண்டாய் ஐயோனிக் 5 EV உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    EV6 எலெக்ட்ரிக் காரானது ஒருமுறை சார்ஜ் செய்தால் 528 கிமீ வரை செல்லும் என்று Kia கூறுகிறது. 350 kWh ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி, EV6 ஆனது 18 நிமிடங்களில் 10 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யப்படலாம். 240 kWh மூலம் சார்ஜ் செய்தால் இதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆகாது என்று கூறப்படுகிறது.

    Kia EV6 GT மற்றும் ஆல்-வீல் டிரைவுடன் கூடிய GT-Line ஆகிய 2 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. இதில் GT வேரியன்ட் 350 Nm பீக் டார்க்கில் 229 hp-ஐ உருவாக்குகிறது. அதே நேரம்GT-Line 605 Nm பீக் டார்க்கில் 347 hp ஆற்றலைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Electric Cars, Kia motors

    அடுத்த செய்தி