Home /News /automobile /

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு தொடங்கியது!

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு தொடங்கியது!

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார்

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார்

Electric Car | இதுவரை கியா நிறுவனம் தயாரித்த கார்களிலேயே, EV6 தான் மிகவும் ஹைடெக்கான கார். இந்தக் காரை ஹேண்டில் செய்வது மிகவும் எளிதானதாகவும், வசதியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய இரண்டு காரணங்களுக்காகவும் மாற்று எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என்று உலகம் முழுவதுமே முயற்சித்துவருகிறது. இதன் காரணமாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக பயன்பாட்டுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவிலும் ஒரு சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறையில் எங்கு பார்த்தாலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் புதியது. ஆனாலும் இந்தியாவில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் அனைவருமே இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் உட்பட எகானமி கார் மற்றும் லக்சுரி வாகனங்கள் என்று அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒரு சில நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இந்தியாவில் இதுவரை எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகவில்லை. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை தட்டி செல்கிறது கியா நிறுவனத்தின் EVஎன்ற எலெக்ட்ரிக் கார். இந்த காரின் முன்பதிவு வரும் மே மாதம் 26 ஆம் தேதி தொடங்குகிறது என்று நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ALSO READ |  Datsun Brand உற்பத்தியை நிறுத்திய நிசான்... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன.? 
 

EV6 என்பது கியா நிறுவனத்தின் முதல் பேட்டரியால் இயங்கும் (பேட்டரி எலக்ட்ரிக் வெஹிக்கிள்) எலெக்ட்ரிக் வாகனம். இந்த வாகனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

கியா நிறுவனத்தின் தனித்துவமான EV பிளாட்ஃபாரமான 'E-GMP' இல் உற்பத்தி செய்யப்பட்ட இந்த EV, தனது வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் மொபிலிட்டி தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.



“குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கார் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவும், காருக்கான முன்பதிவு இந்த மாதம், அதாவது மே 26, 2022 அன்று முதல் தொடங்கும் மற்றும் அதைத்தொடர்ந்து விரைவில் கார் விற்பனைக்கு அறிமுகம் ஆகும்” என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

நிறுவனத்தின் அறிக்கையில், கியாவின் முதல் எலக்ட்ரிக் கார் பற்றிய கூடுதல் தகவலும் வெளியாகின.

ALSO READ |  புதிய எர்டிகா ஃபேஸ் லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய மாருதி சுசுகி - விலை விவரங்கள் இங்கே!
 

EV6 என்பது கியா நிறுவனத்தின் மிகவும் எக்ஸ்ளூசிவ் ஆன கார். எனவே, இது EV வாடிக்கையாளர்களுக்கு என்று இல்லாமல், பிரீமியம் கார் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.



இதுவரை கியா நிறுவனம் தயாரித்த கார்களிலேயே, EV6 தான் மிகவும் ஹைடெக்கான கார். இந்தக் காரை ஹேண்டில் செய்வது மிகவும் எளிதானதாகவும், வசதியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.



மறுசுழற்சி செய்யக்கூடிய மாற்று எரிபொருள் வரும் வரையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் காணப்படும். அந்த வகையில், கியாவின் முதல் எலக்ட்ரிக் காரை நாடே எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதுவரை EV கார்கள் அறிமுகமே ஆகாத நிலையில், முன்பதிவு தொடங்கியதும் எவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric car, Electric Cars

அடுத்த செய்தி