Home /News /automobile /

இந்தியாவில் அறிமுகமே ஆகவில்லை, அதற்குள் முன்பதிவை தொடங்கிய Kia EV6 - என்ன விலை?

இந்தியாவில் அறிமுகமே ஆகவில்லை, அதற்குள் முன்பதிவை தொடங்கிய Kia EV6 - என்ன விலை?

Kia EV6

Kia EV6

Kia V6 | இதன் டாப்-எண்ட் டிரிம் மாடல் சுமார் ரூ.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் கார் தயாரிப்பாளர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அது டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் எம்ஜி போன்ற இந்திய நிறுவனங்களிலிருந்து ஆவ்டி, பிடபிள்யூஎம், மெர்சிடிஸ்-பென்ஸ், ஜாகுவார் மற்றும் வால்வோ போன்ற பிரீமியம் பிராண்டுகள் வரை விரிவடைகிறது. இந்த பட்டியலில் தென் கொரிய பிராண்டான கியாவும் (Kia) விரைவில் சேர உள்ளது. வருகிற ஜூன் 2 ஆம் தேதி இங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள இவி6 மாடல் (EV6) வழியாக இந்நிறுவனம் இந்திய எலெக்டரிக் வாகனம் சந்தைக்குள் காலடி எடுத்து வைக்கிறது.

  எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் ஆன இவி6 மாடல் கடந்த ஆண்டு உலகளவில் வெளியிடப்பட்டது மற்றும் பிரத்யேக எலெக்டரிக் வாகனம் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட முதல் கியா மாடல் இதுவாகும். அப்படியான இவி6 மாடலின் விலை அறிவிப்புக்கு முன்னதாகவே, கியா இந்தியா தனது மின்சார வாகனத்திற்கான ஆர்டர் புத்தகங்களைத் திறந்துள்ளது; ஆம்! இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என்கிற ஆர்வமுள்ளவர்கள் ரூ.3 லட்சத்திற்கு டோக்கன் தொகை செலுத்த இதை முன்பதிவு செய்யலாம்.

  கியா இந்தியா நிறுவனம், இவி6 மாடலின் 100 யூனிட்களை மட்டுமே கொண்டு வர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இவை அனைத்தும் சிபியு (கம்ப்ளீட்லி பில்ட் யூனிட்) பாதை வழியாக நமது இந்திய கரையை அடையும் என்பதால் இந்த காரின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதன் டாப்-எண்ட் டிரிம் மாடல் சுமார் ரூ.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Also read : இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்

  அம்சங்களை பொறுத்தவரை, இவி6 ஆனது 77.4 kWh பேட்டரி பேக்குடன் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் மாடல்களில் கிடைக்கும் என்று கியா குறிப்பிட்டுள்ளது. இவி6 எஃப்டபுள்யூடி ஆனது 222 பிஎச்பி உடன் 350 என்எம் மற்றும் சிங்கிள் சார்ஜில் 528 கிமீ ரேன்ஞ் வரை வழங்குகிறது. மறுகையில் கியா இவி ஆர்டபுள்யூடி ஆனது 316 பிஎச்பி உடன் 605 என்எம் மற்றும் சிங்கிள் சார்ஜில் 425 கிமீ என்கிற ரேன்ஞ் வரை வழங்குகிறது. இவி6 மாடலின் பேட்டரி ஆனது 350 kWh சார்ஜரைப் பயன்படுத்தி, 18 நிமிடங்களில் 10 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் என்றும் கியா குறிப்பிட்டுள்ளது.

  மேலும் இவி6 ஆனது 12.3-இன்ச் கர்வ்டு டச் க்ரீன் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் காக்பிட், மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், சன்ரூஃப், மூன்று டிரைவிங் மோட்-கள் (நார்மல், ஸ்போர்ட் மாற்று ஈகோ), ஆறு லெவல்கள் கொண்ட ரீஜெனரேடிவ் பிரேக்கிங், அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃப்ளஷ் பொருத்தப்பட்ட ஆட்டோ டோர் ஹேண்டில்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டியுடன் கூடிய ஹெட்-அப் டிஸ்ப்ளே, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஷிஃப்ட் பை வயர் சிஸ்டம் மற்றும் பல அம்சங்களையும் பெற்றுள்ளது.

  இவி6 மாடலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, எட்டு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வெஹிக்கல் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், மல்டி-கோலிஷன் பிரேக் அசிஸ்ட் போன்றவைகள் உள்ளன. இவற்றுடன், கியா இவி6 ஆனது அட்வான்ஸ்டு ட்ரைவர் அஸ்சிஸ்டன்ஸ் சிஸ்டமையும் (ADAS) கொண்டுள்ளது. இது ஃபார்வேட் கொல்லிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், லேன்-கீப்பிங் அசிஸ்ட், ட்ரைவர் அட்டென்சன் வார்னிங், பிளைன்ட்-ஸ்பாட் கொல்லிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் போன்றவைகளை வழங்கும்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Automobile

  அடுத்த செய்தி