• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்தியாவில் அறிமுகமானது 6-சீட்டர் கியா கார்னிவல் - விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் அறிமுகமானது 6-சீட்டர் கியா கார்னிவல் - விலை எவ்வளவு தெரியுமா?

கியா கார்னிவல்

கியா கார்னிவல்

கியா கார்னிவல் ஆறு இருக்கை பதிப்பை MPV இன் ஒன்பது இருக்கை மாறுபாட்டிற்கு பதிலாக அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Share this:
கடந்த 2020ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கியா நிறுவனம் புதிய கார்னிவல் பிரீமியம் எம்பிவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், இந்த பிரீமியம் வாகனத்தின் சுமார் 8,000 யூனிட்கள் நாட்டில் விற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, நிறுவனம் கியாவின் புதிய லோகோ, மறுசீரமைக்கப்பட்ட மாறுபாட்டு வரிசை மற்றும் இன்னும் சில அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட 2021 கார்னிவலை அறிமுகப்படுத்தியது.

தற்போது, ​​​​கார் தயாரிப்பாளரான கியா கார்னிவல் ஆறு இருக்கை பதிப்பை MPV இன் ஒன்பது இருக்கை மாறுபாட்டிற்கு பதிலாக அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வாகனத்தின் விலை ரூ. 28.95 லட்சமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கியா இந்தியா புதிய கார்னிவலை பிரீமியம், பிரெஸ்டீஜ், லிமோசின் மற்றும் லிமோசின்+ என நான்கு டிரிம் நிலைகளில் வழங்குகிறது. மேலும் இது ஆறு வகைகளில் வருகிறது. இது முன்பு ஏழு, எட்டு மற்றும் ஒன்பது இருக்கைகள் கொண்ட மாடலாக கிடைத்த நிலையில், இப்போது இது ஆறு, ஏழு மற்றும் எட்டு இருக்கைகள் கொண்ட MPV ஆக வழங்கப்படும்.

கார்னிவலின் மிட்-ஸ்பெக் ஒன்பது இருக்கைகள் கொண்ட பிரெஸ்டீஜ் வேரியண்ட் குறைந்த தேவையின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, நிறுவனம் இப்போது அதிக பிரீமியம் ஆறு இருக்கைகள் கொண்ட பிரெஸ்டீஜ் வேரியண்ட்டை வழங்குகிறது. கியா கார்னிவலின் புதிய ஆறு இருக்கைகள் கொண்ட ப்ரெஸ்டீஜ் மாறுபாட்டின் விலை, ஒன்பது இருக்கைகள் கொண்ட மாடலைக் காட்டிலும் ரூ.1 லட்சம் குறைவாக விற்பனைக்கு வந்துள்ளது.

Also read... Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

இது அதே டிரிம் லெவலில் வழங்கப்பட்டு, அதே அளவு அம்சங்களைப் பெறுகிறது. இருப்பினும், மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது ஒரு பெரிய 540-லிட்டர் பூட் ஸ்பேஸைப் பெற்றுள்ளது. மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளை மடிப்பதன் மூலம் இதனை 2,759 லிட்டராக மேலும் விரிவாக்கலாம். கியா கார்னிவலின் பிற வகைகளின் விலைகள் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

பிரீமியம் 7 இருக்கை - ரூ 24.95 லட்சம்

பிரீமியம் 8 இருக்கை - ரூ 25.15 லட்சம்

பிரெஸ்டீஜ் 7 இருக்கை - ரூ 29.49 லட்சம்

பிரெஸ்டீஜ் 6 இருக்கை (புதியது) - ரூ 28.95 லட்சம்

லிமோசின் 7 இருக்கை - ரூ 31.99 லட்சம்

லிமோசின் பிளஸ் 7 இருக்கை - ரூ 33.99 லட்சம்

மெக்கானிக்கல்களைப் பொறுத்தவரை, கியா கார்னிவல் இன்னும் முன்பு போலவே உள்ளது. இது BS6 இணக்கமான 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஆயில்-பர்னர் 3800 ஆர்பிஎம்மில் 197 ஹெச்பி பவரையும், 1500-2750 ஆர்பிஎம்மில் 440 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ARAI-யின் எரிபொருள் திறன் 13.9 kmpl ஆகும். இதற்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. இருப்பினும், கியா கார்னிவல் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் அதே விலை வரம்பில் கிடைக்கும் வேறு பிராண்ட் எஸ்யூவிகளுக்கு மறைமுக போட்டியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: