Home /News /automobile /

பென்ஸ் காருக்குப் போட்டியாக களம் இறங்கும் கியாவின் Carnival MPV...!

பென்ஸ் காருக்குப் போட்டியாக களம் இறங்கும் கியாவின் Carnival MPV...!

கியா கார்னிவல்

கியா கார்னிவல்

கியாவின் முதல் இந்திய அறிமுகமான செல்டாஸ் எஸ்யூவி கார் இதுவரையில் 75 ஆயிரம் முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

  • News18
  • Last Updated :
    அதிநவீன சொகுசு வசதிகளுடன் இந்தியாவுக்கு ஏற்ற எம்பிவி ரக காராக கியா மோட்டார்ஸ் கார்னிவல் எம்பிவி காரை அறிமுகம் செய்ய உள்ளது.

    தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் செல்டாஸ் எஸ்யூவி கார் மூலம் மிகவும் பிரபலமடைந்தது. செல்டாஸின் வெற்றியால் தொடர்ந்து பல வகையான கார்களை இந்தியாவில் களமிறக்க கியா தயாராகி வருகிறது. சமீபத்தில்தான் கியா தனது எலெக்ட்ரிக் காரை விரைவில் இந்திய விற்பனைக்குக் கொண்டு வரும் என அறிவித்திருந்தது.

    இதுகுறித்து கியா இந்தியாவின் துணைத் தலைவர் மனோகர் கூறுகையில், “வருகிற ஜனவரி- பிப்ரவரி காலகட்டத்தில் சர்வதேச அளவில் புதிய கார்னிவல் எம்பிவி சொகுசு காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்தியாவுக்கு விரைவில் கார்னிவல் எம்பிவி காரை கொண்டு வருவோம். இந்திய சந்தைகளில் இதுவரையில் இல்லாத சொகுசு அம்சங்களுடன் மிகப் பெரிய இடவசதி கொண்டதாக இந்தக் கார் இருக்கும்.

    இந்தக் காரின் சிறப்பு அம்சமே இதனது சொகுசு அனுபவமும் காரின் மிகப்பெரிய இடவசதியும்தான். இனி வரும் காலங்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளோம். இதுவரையில் ஹேட்ச்பேக் ரக கார்களை நாங்கள் அறிமுகம் செய்யவில்லை. விரைவில் இதுதொடர்பான ஆலோசனை நடைபெறும்” என்றார்.

    கியாவின் முதல் இந்திய அறிமுகமான செல்டாஸ் எஸ்யூவி கார் இதுவரையில் 75 ஆயிரம் முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

    மேலும் பார்க்க: எரிபொருள் செல் மின் வாகனங்களை இந்தியாவில் இறக்க ஹூண்டாய் திட்டம்!
    Published by:Rahini M
    First published:

    Tags: Kia motors

    அடுத்த செய்தி