Home /News /automobile /

7-சீட்டர் MPV காரான Carens-ஐ ரூ.8.99 லட்சம் துவக்க விலையில் அறிமுகப்படுத்தீதிய Kia!

7-சீட்டர் MPV காரான Carens-ஐ ரூ.8.99 லட்சம் துவக்க விலையில் அறிமுகப்படுத்தீதிய Kia!

Carens

Carens

பல்வேறு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்ப்பட்டுள்ள Kia Carens-ன் விலை ரூ.8.99 லட்சம் முதல் ரூ.16.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 7 இருக்கைகள் கொண்ட காரான Carens-ஐ கியா இந்தியா (kia India) நிறுவனம் இறுதியாக அறிமுகப்படுத்தி உள்ளது. கேரன்ஸை இந்திய சந்தையில் ரூ.8.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கியா இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தென் கொரிய வாகன உற்பத்தியாளரான கியா நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ், கார்னிவல் மற்றும் சோனெட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து நான்காவது தயாரிப்பாக Kia Carens-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. பல்வேறு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்ப்பட்டுள்ள Kia Carens-ன் விலை ரூ.8.99 லட்சம் முதல் ரூ.16.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கியா கேரன்ஸ் டிசம்பர் 16, 2021 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. 6 ஏர்பேக்ஸ் உட்பட 10 ஹை-செக்யூர் பாதுகாப்புப் பேக்கேஜ்களை கேரன்ஸ் வழங்குகிறது

Kia Carens பிரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் பிளஸ், லக்சுரி மற்றும் லக்சுரி பிளஸ் உள்ளிட்ட 5 வேரியன்ட்களில் வருகிறது. கேரன்ஸின் (1.4-litre, Turbo GDI) ஓனர்ஷிப் காஸ்ட் ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 0.37 பைசா மட்டுமே என்றும் கியா கூறுகிறது. டிசைன் அடிப்படையில், Carens ஒரு MPV-ஆக இருந்தாலும், இது ஒரு ச்சங்கி ஃபரன்ட் பம்பர், பிளாட் போனட் (flat bonnet), டூயல்-பீம் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் இன்டக்ரேட்டட் Y-ஷேப்டு LED DRLs மற்றும் குரோம் ஹைலைட்ஸ் மற்றும் ஸ்போர்ட்டி டூயல்-டோன் அலாய் வீல்ஸ், ரூஃப் ரெயில்ஸ், திக் பாடி கிளாடிங் போன்ற பல SUV ஸ்டைல் அம்சங்களை கொண்டுள்ளது. ARAI சான்றளிக்கப்பட்ட எரிபொருள் செயல்திறன் புள்ளிவிவரங்கள் டீசலுக்கு 21.3kmpl மற்றும் பெட்ரோலுக்கு 16.5kmpl ஆகும்.

இந்த MPV கியா கனெக்ட் மூலம் 66 இணைக்கப்பட்ட கார் அம்சங்கள், பவர் ட்ரெய்ன்கள், டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் மற்றும் அதன் வகுப்பில் மிக நீளமான வீல்பேஸ் ஆகியவற்றுடன் மேம்பட்ட கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது. தவிர கியாவின் Carens MPV-ஆனது 10.25-இன்ச் HD டச்ஸ்கிரீன் நேவிகேஷன் உடன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கியா கனெக்ட், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதுகாப்புடன் கூடிய ஸ்மார்ட் ப்யூர் ஏர் பியூரிஃபையர், காற்றோட்டமான முன் இருக்கைகள், "ஒன் டச் ஈஸி எலெக்ட்ரிக் டம்பிள்" மற்றும் பனோரமிக் சன்ரூஃப் கொண்ட 2-வது வரிசை இருக்கை உள்ளிட்ட பல ஃபர்ஸ்ட் கிளாஸ் அம்சங்களை வழங்குகிறது.

Also read... எதிர்காலத்தில் முக்கிய எரிபொருளாக மாறும் Green Hydrogen.. உலகளவில் ஏற்றுமதி செய்யவும் திட்டம் - நிதின் கட்கரி!

சிறந்த மற்றும் ஒருங்கிணைந்த ஓனர்ஷிப் அனுபவத்திற்காக MyKia என்ற App-ஐ கியா இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. Kia Carens காரானது Kia Seltos-ஐ இயக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களான 140 PS பவர் மற்றும் 242 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.4-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 115PS பவர் மற்றும் 250 Nm டார்க்கை உருவாக்கும் 1.5-லிட்டர் டர்போ டீசல் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது.

இதில் பெட்ரோல் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் டீசல் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் அல்காசர், டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகியவற்றுக்கு போட்டியாக கியா கேரன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kia motors

அடுத்த செய்தி