அறிமுகமான சில மாதங்களிலேயே நாட்டின் முன்னனி கார் நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்துள்ளது கியா மோட்டார்ஸ்.
கியா மோட்டார்ஸின் செல்டாஸ் எஸ்யூவி-க்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் இந்தியாவில் நான்காம் சிறந்த கார் உற்பத்தியாளர் அந்தஸ்தை கியா பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 14,005 செல்டாஸ் எஸ்யூவி கார்களை கியா விற்பனை செய்துள்ளது. கடந்த அக்டோபரில் இந்த விற்பனை எண்ணிக்கை 12,800 ஆக இருந்தது.
உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டின் டாப் கனெக்டட் கார் என்ற பெருமையும் செல்டாஸ் எஸ்யூவி-க்கு கிடைத்துள்ளது. UVO கனெக்டட் தொழில்நுட்பம் மூலம் சுமார் 37 வகைகளான ஸ்மார்ட் கார் அம்சங்களை வாடிக்கையாளர்களால் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
UVO கனெக்ஷன் மூலம் நேவிகேஷன், பாதுகாப்பு, வாகன மேலாண்மை, ரிமோட் கன்ட்ரோல் மற்றும் இதர செளகரியங்களைக் கையாள முடியும். AI வாய்ஸ் கமாண்ட், வாகனம் திருடப்பட்டால் ட்ராக் செய்யும் அம்சம், வாகன இயக்கத்தை முடக்குதல், SOS உதவி, ரிமோட் உதவியுடன் என்ஜின் இயக்கம், காற்று சுத்திகரிப்பு, பாதுகாப்பு அலர்ட் எனப் பல சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: விலைகுறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த எஸ்யூவி- ரேஞ்ச் ரோவர் வெலார்..! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.