சுற்றுச் சூழல் நன்மை, சிக்கனம், எளிதான இயக்கம் என பல்வேறு காரணிகளால் தற்போது உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அடிக்கடி எலக்ட்ரிக் வாகனங்கள், குறிப்பாக பைக்குகள் தீப் பிடித்து எரிவதால் எலக்ட்ரிக் பைக்குகள் வாங்குவது என்பது பெரும்பலான மக்களின் இரண்டாம் விருப்பமாகவே உள்ளது. அதனால் தான் எலக்ட்ரிக் பைக்குகளின் விற்பனையில் சுணக்கம் இருக்கிறது.
எலக்ட்ரிக் பைக்குகள் தீ விபத்திற்குள்ளாவது குறித்து எத்தனையோ விழிப்புணர்வுகள் தரப்பட்டாலும் அந்த பயம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இங்கே நாம் பார்க்கப் போகும் சில எளிய வழிகளை கடைப்பிடித்தாலே பைக்குகள் தீப்பிடிக்கும் ஆபத்தில் இருந்து எளிதாக தப்பிக்கலாம். அவை என்னென்ன… பார்க்கலாம் விரிவாக.
பொதுவாக எலக்ட்ரிக் பைக்குகளில் தீப்பிடிப்பது அதில் இருக்கும் பேட்டரியால் தான். நியூயார்கள் நகரில் மட்டும் கடந்த 2022ஆம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட எலக்டரிக் பைக்குகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த பைக்குகளில் இருந்த லித்தியம்-இயோன் பேட்டரிகள் தான். லித்தியம்-இயோன் பேட்டரிகள் தானாக தீப்பிடிப்பதில்லை. அதிக வெப்பம் ஏற்படுவதால் தான் அந்த பேட்டரிகளில் தீப்பற்றுகிறது. எனவே பேட்டரி சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு வீட்டிற்குள் நிறுத்தி சார்ஜ் ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
காற்றோட்டமான, காலியிடங்களில் நிறுத்தி சார்ஜ் ஏற்ற வேண்டும்.
பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு நாம் கிடைக்கின்ற சார்ஜர்களை எல்லாம் பயன்படுத்துவதும் ஆபத்தை விளைவிக்கும். அதனால் நாம் வைத்திருக்கும் பைக்கிற்கு தயாரிப்பாளரும் விற்பனையாளரும் என்ன சார்ஜரை பரிந்துரைக்கின்றனரோ, அந்த அங்கீகரிக்கப்பட்ட சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சார்ஜ் ஏற்றுவதற்கான வழிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
தவறான வழிமுறைகளால் நமது லித்தியம்-இயோன் பேட்டரி தீப்பற்றும் சூழல் ஏற்பட்டால் உடனே அது தீப்பற்றாது.
பேட்ரியின் வண்ணம் முதலில் மாறத் தொடங்கும், பிறகு ஒரு வித விநோத சத்தத்துடன் புகை வெளியேறும். அதன் பிறகு தான் தீப்பற்றும். எனவே சார்ஜ் போட்டுவிட்டு வெளியில் செல்வதோ, சார்ஜ் ஏறுவதை கண்காணிக்காமல் இருந்தாலோ, அசாதாரண சூழலில் தீப்பற்றுவதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எனவே சார்ஜ் போட்டுவிட்டு கண்காணிப்பிலேயே இருந்தால் தீப்பற்றும் சூழல் ஏற்பட்டாலும் நம்மால் தடுத்துவிட முடியும்.
அதே போல் எலக்ட்ரிக் பைக்கை அதிக நேரம் நேரடி சூரிய ஒளியில் இருக்குமாறு நிறுத்தி வைக்கக் கூடாது. அதே போல் லித்தியம்-இயோன் பேட்டரிகளையும் நேரடி சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. இதுவும் அதிக வெப்பம் ஏற்பட்டு தீப்பற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும், அதிக வெப்பம் ஏற்படுத்தும் காரணிகள் அருகிலும் எலக்ட்ரிக் பைக்குகளை அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது.
நமது எலக்ட்ரிக் பைக்குளில் இருக்கும் பேட்டரி சேதமடைந்துவிட்டால் அதை சரி செய்து தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சேதமடைந்த பேட்டரிகள் எப்போதுமே ஆபத்தனவை தான். எனவே பேட்டரி சேதமடைந்துவிட்டால் அதை உடனடியாக அகற்றிவிட்டு புதிய பேட்டரியை பயன்படுத்த வேண்டும். அதே போல் பழைய பேட்ரிகளையும், செகண்ட் ஹேண்ட் பேட்டரிகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது.
இவற்றையெல்லாம் விட முக்கியமானது எலக்ட்ரிக் பைக்கு வாங்கும் போதே நாம் கவனிக்க வேண்டியது. எலக்ட்ரிக் பைக் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் தரமான தயாரிப்புகளையே வாங்க வேண்டும். விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற, அங்கீகரிக்கப்படாத பைக்குகளை வாங்கினால் இது போன்ற ரிஸ்குகள் அதிகம்.இந்த சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் எடுத்துக் கொண்டாலே நமது எல்ட்ரிக் பைக்குகள் தீப்பிடிக்காமல் இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Trending