15.3 லட்ச ரூபாயில் புதிய வண்ணத்தில் கவாஸகி பைக்

15.3 லட்ச ரூபாயில் புதிய வண்ணத்தில் கவாஸகி பைக்
கவாசகி-Z900-RS
  • News18
  • Last Updated: July 17, 2018, 7:24 PM IST
  • Share this:
முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான கவாஸகி, கருப்பு வண்ணத்தில் புதிய இசட்900ஆர்எஸ் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் பைக், சூப்பர் பைக், ரேஸ் பைக் என பல வகைகளில் வாகனங்களை கவாஸகி நிறுவனம் தயாரித்து வருகிறது. கவாஸகி நிறுவனத்துக்கென தனி பிரியர்களும் உள்ளனர்.  குறிப்பாக கவாஸகி இசட் 1 மாடலாகும்.  1970களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடலுக்கு மரியாதை செய்யும் வகையில் கவாஸகி இசட்900ஆர்எஸ் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரஞ்ச் வண்ணத்தில் கவாசகி இசட்900ஆர்எஸ்

கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் ஆரஞ்சு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில், கவாஸகி இசட்900ஆர்எஸ் பைக்குக்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இதே பைக் தற்போது கருப்பு வண்ணத்திலும் கவாஸகி நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.Loading...

கவாசகி Z900RS-ன் ஃப்ரண்ட் வியூவ்
இதுகுறித்து பேசிய கவாசகி நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் யுடாகா யமாஷிட்டா கூறுகையில்,  “கவாஸகி நிறுவனம் இசட்900ஆர்எஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஒரு சாதனையாக கருதுகிறோம். ஏன் என்றால் கவாசகி இசட்900ஆர்எஸ் வெறும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட ஒரு பைக் ஆகும்” என்று தெரிவித்தார்.

மேலும் “சொகுசு பைக் பிரியர்களால் மட்டுமே விரும்பி வாங்கப்படும் இந்த இசட்900ஆர்எஸ் பைக். அதனுடைய தரத்துக்காக பல பாராட்டுகளை பெற்றுள்ளது. எங்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்பை  தொடர்ந்து இப்போது இதே வண்டியை கருப்பு வண்ணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்றும் யமாஷிட்டா தெரிவித்துள்ளார். இந்த வண்டியின் விலை ரூ.15.3 லட்சம்.
First published: July 17, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...