Kawasaki Z650 RS பைக்கின் புதிய லிமிட்டட் எடிஷன் அறிமுகம் - இந்தியாவில் 20 பைக்குகளே விற்பனைக்கு கிடைக்கும்!!
Kawasaki Z650 RS பைக்கின் புதிய லிமிட்டட் எடிஷன் அறிமுகம் - இந்தியாவில் 20 பைக்குகளே விற்பனைக்கு கிடைக்கும்!!
கவாஸாகி
Kawasaki Z650RS : ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி Z650RS பைக்கில் தனது 50-வது ஆண்டு எடிஷனை இந்தியாவில் தற்போது ரூ.6.79 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கவாஸாகி இந்தியா நிறுவனம் சமீபத்தில் Z650RS பைக்கின் 50-வது ஆண்டு எடிஷன் மாடலை (Kawasaki Z650RS 50th anniversary edition) இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. முன்னதாக கவாஸாகி நிறுவனம் தனது Z650RS நவீன கிளாசிக் பைக்கை கடந்த நவம்பர் 2021-ல் ரூ.6.65 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தான் ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி Z650RS பைக்கில் தனது 50-வது ஆண்டு எடிஷனை இந்தியாவில் தற்போது ரூ.6.79 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு எடிஷன் மோட்டார் சைக்கிளின் 20 யூனிட்கள் மட்டுமே நாட்டில் கிடைக்கும் என்றும் கவாஸாகி இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.
இந்த 50th anniversary edition புதிய கவாஸாகி 'Z' மோட்டார் சைக்கிள்களின் அடிப்படையாக மாறியுள்ள Kawasaki Z1-ன் 50-வது ஆண்டு நிறைவை நினைவுபடுத்துகிறது. அதாவது Z650RS 50வது ஆண்டுவிழா பதிப்பு Z1 மோட்டார்சைக்கிளின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தியாவில் டீஸ் செய்யப்பட்ட Z650RS 50th anniversary edition வழக்கமான மாடலை விட சில காஸ்மெட்டிக் மாற்றங்களை மட்டுமே பெறுகிறது. பளபளப்புடன் கூடிய க்ளாஸ் பிளாக் ஃபிரேம் ஃபினிஷ் கொண்ட புதிய கேண்டி டயமண்ட் பிரவுன் கலரும் புதிய காஸ்மெட்டிக் மாற்றங்களில் அடங்கும்.
மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள இந்த புதிய எடிஷன் பைக்கில் கோல்டு கலருடன் கூடிய ஸ்போக்-ஸ்டைல் காஸ்ட் வீல்ஸ், ஃபியூயல் டேங்கில் 'Z 50th' லோகோ, கான்ட்ராஸ்ட் ஸ்ட்டிச்சிங் கொண்ட கடினமான லெதர் இருக்கை, பிளாக்ட்-அவுட் மெக்கானிக்கல் பிட்ஸ் மற்றும் ரெட்ரோ-ஸ்டைலர் ரியர் கிராப் ஹேண்டில் பார்கள் ஆகியவையும் உள்ளன.
Kawasaki Z650RS 50th anniversary edition பைக்கின் 20 யூனிட்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்ய உள்ள கவாஸாகி இந்தியா நிறுவனம் புக்கிங் செய்யப்படும் இந்த புத்தம் புதிய எடிஷன் பைக்கின் டெலிவரிகள் மார்ச் 2022 முதல் தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளது. நியூ எடிஷன் Z650RS பைக்கானது ஏற்கனவே இருக்கும் Z650RS பைக்கை போலவே ஸ்பீடோமீட்டர் மற்றும் டேகோமீட்டருக்கான அனலாக் கவுண்டர்களுடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் வருகிறது. இது ஒரு ஸ்பெஷல் ஃபயர் கிராக்கர் ரெட் கலர் ஸ்கீமில் வருகிறது. இந்த பைக்கின் கோல்டன் அலாய் வீல்கள் இந்த பைக்கிற்கு ஒரு நல்ல கான்ட்ராஸ்ட்டை சேர்க்கிறது.
ஏற்கனவே விற்பனையில் இருக்கும் Z650RS பைக்கில் உள்ள அதே 649cc, பேர்லல்-ட்வின் என்ஜின் (649cc, parallel-twin engine ) தான் இந்த ஸ்பெஷல் எடிஷனிலும் உள்ளது. இது 8,000 rpm-ல் 67 BHP மற்றும், 6,700 rpm-ல் 64 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிலிட்டியுடன் ஹோரிசான்ட்டல் பேக்-லிங்க்கும் உள்ளது. பிரேக்கிங் சிஸ்டம்களில் 300 மிமீ டூயல் ஃப்ரண்ட் டிஸ்க்குகள் மற்றும் 220 மிமீ சிங்கிள் ரியர் டிஸ்க் ஆகிவை அடக்கம்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.