ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நிஞ்சா 300-க்கு மாற்றாக களமிறங்கிய கவாஸ்கி W175.. ரூ.1.47 லட்சத்திற்கு விற்பனை.!

நிஞ்சா 300-க்கு மாற்றாக களமிறங்கிய கவாஸ்கி W175.. ரூ.1.47 லட்சத்திற்கு விற்பனை.!

கவாஸ்கி W175

கவாஸ்கி W175

Kawasaki W175 | 1.47 லட்சத்தை ஆரம்ப விலையாக அறிவித்து, கவாஸ்கி நிறுவனம் தன்னுடைய w175 மோட்டார் பைக்கை சந்தையில் இறக்கி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜப்பானிய ஆட்டோ மொபைல் நிறுவனமான கவாஸ்கியின் w175 மாடல் விற்பனைக்கு தயாராகி வருகிறது. இந்த பைக்கை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கவாஸ்கி டீலர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் இந்த வருடம் டிசம்பர் மாதம் பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

1.47 லட்சத்தை ஆரம்ப விலையாக அறிவித்து, கவாஸ்கி நிறுவனம் தன்னுடைய w175 மோட்டார் பைக்கை சந்தையில் இறக்கி உள்ளது. இந்த புதிய மோட்டார் பைக் ஆனது ஏற்கனவே பைக் பிரியர்களின் ஆத்மார்த்த தேர்வாக இருக்கும் கவாஸ்கியின் நிஞ்சா 300 மாடலுக்கு நல்ல ஒரு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கவாஸ்கி w175 மாடலில் வரும் பைக்குகள் இரண்டு மாறுபட்ட எடிஷன்களில் கிடைக்கின்றன. ஒன்று ஸ்டாண்டர்ட் எடிஷன் எனவும் இன்னொன்று ஸ்பெஷல் எடிஷன் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் மாடலானது இந்திய மதிப்பில் சுமார் 1.49 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என கவாஸ்கி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பைக்கில் ரெட்ரோ டிசைன்களை சேர்த்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த கவாஸ்கி 175 மாடல் வாங்க விரும்புவோர் அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து டீலர்களிடமும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் வரும் டிசம்பர் மாதத்தில் பைக்குகள் டெலிவரி செய்யப்படும் எனவும் கவாஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்தமான தேர்வாக இருக்கும் யமஹா FZ-X மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஆகியவற்றிற்கு போட்டியாக இந்த கவாஸ்கி w175 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸ்கி w175 அமைப்பு மற்றும் வசதிகள்:

இந்த கவாஸ்கி w175 மாடல் ஆனது தன்னுடைய உடன்பிறப்பாக என்று கருதப்படும், ஏற்கனவே வெளிவந்த டபிள்யூ 800 மாடல் இருந்து சில டிசைனை முன்மாதிரியாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வட்ட வடிவமான ஹெட் லைட் மற்றும் மழுங்கிய முனை உடைய கூம்பு வடித்தை ஒத்த எரிபொருள் டேங்க் மற்றும் தட்டையான சைட் பேனல் ஆகியவை நமக்கு w800 மாடலை நினைவுப்படுத்துகின்றன. மேலும் இந்த வண்டியை ஓட்டுவதற்கு அப்பர்ரைட் பொசிஷன் எனும் மிக வசதியான ஒரு நிலையில் அமர்ந்து ஓட்டுவதற்கும் 79mm அளவுள்ள கச்சிதமாக அமைக்கப்பட்ட சீட்டும் பார்ப்பதற்கு மிக வசதியாக இருக்கிறது.

இதனைத் தவிர்த்து கவாஸ்கி நிறுவனம் இதில் எளிமையான அனலாக் ஸ்பீடோமீட்டர்களையும், சிக்ஸ்டெல் லைட்டுகள், ஹைபீம், இண்டிகேட்டர்கள் மற்றும் இரண்டு எச்சரிக்கை விளக்குகளையும் இதில் பொருத்தியுள்ளது.

Also Read : இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் Hero Maestro Xoom 110 அறிமுகம்!

எஞ்சின் மற்றும் சேசிஸ்:

கவாஸ்கி w175 மாடலில் 177 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கோல்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 13PS மற்றும் 13.2Nm அளவுள்ள டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளது. இந்த எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள BS6 நார்ம்ஸ் ஆனது 5 நிலையிலான கியர் பாக்ஸை கொண்டுள்ளது. மேற்கூறிய அம்சங்களால் மோட்டார் பைக் பிரியர்கள் 135kg எடையுள்ள இந்த வண்டியின் இழுக்கும் திறனை பற்றியோ அல்லது அது உருவாக்கும் சக்தியை பற்றியோ கவலை கொள்ளவே தேவையில்லை.

Also Read : ராயல் என்பீல்ட் களமிறக்கியுள்ள ஹண்டர் 350.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை 30 mm அளவுள்ள டெலஸ்கோப் பிரண்ட் ஃபோர்க்ஸுடன் கூடிய டூயல் ஷாக் அப்சார்பர்ஸ் பின்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டத்தை தரமுள்ளதாக மாற்றுவதற்காக முன்பக்கம் சிங்கிள் டிஸ்க்கும் பின்பக்கம் ட்ரம் யூனிட்டும் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, India