Home /News /automobile /

Kawasaki பைக் விலை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க உள்ளது... விரிவான விலை பட்டியல் இதோ!

Kawasaki பைக் விலை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க உள்ளது... விரிவான விலை பட்டியல் இதோ!

கவாஸாகி பைக்

கவாஸாகி பைக்

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற பைக்குகளில் விலையை ஏற்றி உள்ளது. அவற்றில் கவாஸாகி வண்டிகளும் அடங்கும். வருகின்ற ஜனவரி 1 முதல் பல கவாஸாகி பைக்குகளின் விலை ஏற்றப்பட உள்ளதாக அதன் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் விலை மாறி கொண்டே இருக்கிறது. அதே போன்று பல்வேறு புது மாடல்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே அவற்றின் சிறப்பம்சத்திற்கு ஏற்ப அதன் விலையும் கூட செய்கிறது. இந்த விலை ஏற்றம் என்பது கார்கள் முதல் பைக்குகள் வரை பொருந்தும். அந்த வகையில், வரும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற பைக்குகளில் விலையை ஏற்றி உள்ளது. அவற்றில் கவாஸாகி வண்டிகளும் அடங்கும். வருகின்ற ஜனவரி 1 முதல் பல கவாஸாகி பைக்குகளின் விலை ஏற்றப்பட உள்ளதாக அதன் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல இந்தியர்கள் கவாஸாகி பைக்குகளை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் விற்கப்படும் கவாஸாகி வண்டிகளின் புதிய விலை பட்டியலை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எனவே இதை பொறுத்து கவாஸாகி பைக்குகளை அடுத்த ஆண்டு வாங்குவதற்கு யோசித்து கொண்டுள்ளோர் தற்போதே அவற்றை புக்கிங் செய்து கொள்ளலாம்.

இதன்படி கவாஸாகி பைக்குகளை இந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் புக்கிங் செய்தால், அடுத்த 45 நாட்களுக்கு பிறகு தான் டெலிவரி செய்யப்படும். எனவே டிசம்பர் 31-க்கு முன் புக்கிங் செய்வோருக்கு இதன் பழைய விலை பொருந்தும். மேலும் ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு புக்கிங் செய்வோருக்கு விலை கூடுதல் செய்யப்படும். குறிப்பாக கவாஸாகி பைக்குகளுக்கு ரூ.23,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றில் நிஞ்சா ZX-10R மாடல் பைக்கின் விலை தான் அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ | கிக்-ஸ்டார்ட் காரை உருவாக்கிய கிராமத்து மனிதருக்கு புதிய Bolero காரை பரிசளிக்க போகும் ஆனந்த் மஹிந்திரா!

கவாஸாகி நிஞ்ஜா 300 மாடல் பைக்கிற்கு ரூ.6000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பைக்கின் விலை 3.24 லட்சமாக உள்ளது. இந்த விலை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து வாங்குவோருக்கு பொருந்தும். இதே போன்று பல கவாஸாகி பைக் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இடை நிலை எடைகொண்ட பைக்குகளான கவாஸாகி Z650 மாடல், வெர்ஸிஸ் 650 மற்றும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் மாடல்களான கவாஸாகி Z H2 மற்றும் Z H2 SE ஆகியவற்றின் விலையும் கூடியுள்ளது.



இந்த விலை உயர்வு பட்டியலில் சமீபத்தில் வெளியான கவாஸாகி நியூ Z650RS மாடலும் அடங்கும். விலை உயர்வுக்கு முன் இதன் விலை 6.65 லட்சமாக இருந்தது. ஜனவரி 1 ஆம் தேதிக்கு பின் இதன் விலை 6.72 லட்சமாக விற்கப்படவுள்ளது. இந்த மாடல் Z650 ஸ்ட்ரீட் பைட்டர் வகையை போன்று தோற்றத்தில் இருக்கும். மேலும் ஒரு சில மாடல் கவாஸாகி பைக்குகளில் விலை கூடாமல் உள்ளது. KX மற்றும் KLX சீரிஸ் பைக்குகளின் விலை ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Apache RTR 165 RP... விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கவாஸாகி W800 மற்றும் நியூ நிஞ்சா ZX-6R மாடல் பைக்குகளும் வெளியாக உள்ளன. இவற்றின் சிறப்பம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கான அப்டேட் வரும்வரை காத்திருப்போம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி