Home /News /automobile /

கார் வாங்க முடியாது என தோற்றத்தை வைத்து அவமதித்த ஷோரூம் பிரதிநிதி - ஒரு மணிநேரத்தில் ரூ.10 லட்சத்துடன் வந்து விவசாயி பதிலடி!!

கார் வாங்க முடியாது என தோற்றத்தை வைத்து அவமதித்த ஷோரூம் பிரதிநிதி - ஒரு மணிநேரத்தில் ரூ.10 லட்சத்துடன் வந்து விவசாயி பதிலடி!!

Mahindra

Mahindra

10 லட்ச ரூபாயுடன் வந்ததால், ஷோரூம் விற்பனை பிரதிநிதி மட்டுமல்லாமல் அந்த ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் விவசாயியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

    ஷோரூமுக்கு கார் வாங்க வந்த விவசாயியின் ஆடை உள்ளிட்ட வெளித் தோற்றத்தை வைத்து ஷோரூம் விற்பனை பிரதிநிதி அவரை அவமதித்த நிலையில், அடுத்த ஒரு மணிநேரத்தில் 10 லட்ச ரூபாய் ரொக்கத்துடன்  வந்து விவசாயி பதிலடி தந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது. இது தொடர்பாக கார் ஷோரூம் விற்பனையாளர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.

    மகிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்து வருபவர். திறமையாளர்களை கண்டறிந்து பாராட்டுவதுடன் பரிசளிப்பது, திறமைசாளிகளை அடையாளப்படுத்துவதில் ஆனந்த் மகிந்திராவுக்கு நிகர் அவர் மட்டுமே என பாராட்டப்படுபவர். ஆனால் ஆனந்த் மகிந்திராவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அவரின் நிறுவன ஊழியர் செயல்பாடு அமைந்துள்ளது.

    கர்நாடக மாநிலம் துமகூர் பகுதியில் உள்ள மகிந்திரா நிறுவனத்தின் கார் ஷோரூக்கு கெம்பகவுடா எனும் விவசாயி தனது நண்பர்களுடன் சென்று கார்களை பார்வையிட்டுள்ளார். இவர் பொலேரோ பிக் அப் ட்ரக்கை வாங்கும் எண்ணத்துடன் அங்கு சென்றிருக்கிறார். எனவே அந்தக் கார் குறித்து விசாரித்த போது, விவசாயி கெம்பகவுடாவின் எளிமையான தோற்றத்தையும், ஆடையையும் பார்த்து இவர் கார் வாங்கக் கூடிய அளவுக்கு பணவசதி படைத்தவர் அல்ல என கருதிய, ஷோரூம் விற்பனை பிரதிநிதி, விவசாயி கெம்பகவுடாவை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    Also read:  கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்

    கெம்பகவுடாவின் நண்பர்கள் முன்னிலையில், இந்தக் காரின் விலை 10 லட்ச ரூபாய், ஆனால் உன் பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இருக்காது, உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என அந்த ஷோரூம் விற்பனை பிரதிநிதி கெம்பகவுடாவை அவமதித்ததாக கூறப்படுகிறது.

    அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் வந்துவிட்டால் இந்தக் காரை ஒரே நாளில் உன்னால் டெலிவரி செய்ய முடியுமா என சவால் விடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட கெம்பகவுடா தனது நண்பர்களிடம் கேட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே சொன்னது போலவே 10 லட்ச ரூபாய் பணத்துடன் ஷோரூமுக்கு சென்றிருக்கிறார்.

    ஆனால் அந்தக் காரை உடனடியாக டெலிவரி செய்ய இயலாது, வெயிட்டிங் பீரியட் காரணமாக புக்கிங் செய்தால் கூட டெலிவரி கொடுக்க குறைந்தது 3 நாட்கள் ஆகிவிடும், எனவே அந்த ஷோரூம் விற்பனை பிரதிநிதி, விவசாயி கெம்பகவுடாவிடம் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார்.

    Also read:   2014க்கு பின் பாஜக கூட்டணியின் முதல் இஸ்லாமிய வேட்பாளர் - இவர் யார் தெரியுமா?

    இருப்பினும் தன்னை அவமதித்த ஷோரூம் விற்பனை பிரதிநிதியிடம் சூடாக வாக்குவாதம் நடத்தியுள்ளார் அந்த விவசாயி. பின்னர் போலீசாரை வரவழைத்த விவசாயி கெம்பகவுடா, ஷோரூம் விற்பனை பிரதிநிதி தன்னை அவமதித்ததாகவும், சொன்னது போல அவரால் காரை டெலிவரி கொடுக்க இயலவில்லை எனவும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமரசம் செய்துள்ளனர். ஷோரூம் விற்பனை பிரதிநிதி மட்டுமல்லாமல் அந்த ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் விவசாயியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பின்னர் கார் வாங்காமல் விவசாயி அங்கிருந்து தனது நண்பர்களுடன் புறப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக் கூடாது என்ற உண்மை, இச்சம்பவம் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Anand Mahindra, Karnataka, Mahindra

    அடுத்த செய்தி