கடுமையான ட்ராஃபிக் அபராதமா? தப்பிக்க 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்!

இது ஆவணங்கள் கையில் இல்லாமல் ஆனால், வீட்டிலிருக்கிறது என்றால் மட்டுமே உங்களைக் கடுமையான அபராதத்திலிருந்து காப்பாற்றும்.

Web Desk | news18
Updated: September 10, 2019, 8:09 PM IST
கடுமையான ட்ராஃபிக் அபராதமா? தப்பிக்க 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்!
மாதிரிப்படம் (News18 creative/ Mir Suhail)
Web Desk | news18
Updated: September 10, 2019, 8:09 PM IST
இந்தியாவில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுவதாக நாடு முழுவதிலிமிருந்தும் புகார்கள் குவிந்து வருகின்றன.

சாலை விதிமுறைகளை ஒழுங்குபடுத்த கடுமையான அபராதங்கள் அவசியம்தான் என அரசும் வலியுறுத்தியது. ஆனால், மக்கள் 80 ஆயிரம் ரூபாய் வரையில் எல்லாம் அபராதம் மட்டுமே செலுத்தும் நிலை ஏற்பட்டது பல தரப்புகளிலிருந்தும் புலம்பல்களாக வெளிப்பட்டது.

இந்நிலையில், மக்கள் அறியாத ஒரு விதிமுறை உள்ளது. அதாவது, போதிய ஆவணங்கள் உங்களிடம் பயணத்தின் போது இல்லை என்று வைத்துக்கொள்வோம். இத்தகைய சூழலில் போக்குவரத்துப் போலீஸார் உங்களுக்கு அபராதம் விதித்தால் நீங்கள் 100 ரூபாய் மட்டும் செலுத்தி அப்போதைய கடுமையான அபராதத்திலிருந்து தப்பிக்கலாம்.


அதாவது, ஆவணங்கள் கையில் இல்லாமல் வீட்டில் இருந்தால் நீங்கள் 100 ரூபாய் மட்டும் செலுத்தி ரசீது வாங்கிக்கொள்ளலாம். அடுத்த 15 நாட்களுக்குள் நீங்கள் தகுந்த போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து உங்களது 100 ரூபாயையும் திருப்பி வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால், 15 நாட்களுக்கு மேல் ஆனால் அபராதம் இன்னும் கடுமையானதாக மாறி நடவடிக்கையும் எடுக்கப்படும். இது ஆவணங்கள் கையில் இல்லாமல் ஆனால், வீட்டிலிருக்கிறது என்றால் மட்டுமே உங்களைக் கடுமையான அபராதத்திலிருந்து இந்த விதிமுறை காப்பாற்றும். இந்த விதிமுறை இன்றும் அமலில்தான் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் பார்க்க: ’வேகமாக சென்றதால் என் காருக்கும் அபராதம் விதித்துள்ளார்கள்’- ட்ராஃபிக் அபராதம் குறித்து நிதின் கட்கரி

Loading...

பொருளாதார மந்த நிலையால் மோட்டார் பம்புசெட் தொழிலிலும் சரிவு!
First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...